இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, December 10, 2012

இரண்டாம் நாள் கலந்தாய்வில் பணியிடங்கள் தேர்வில் மந்தம்

இரண்டாவது நாளாக, நேற்று நடந்த கலந்தாய்வில், 2,035 பட்டதாரி ஆசிரியர்கள் பங்கேற்று, வெளி மாவட்டங்களில் உள்ள, காலி பணியிடங்களை தேர்வு செய்தனர். டி.இ.டி., தேர்வில் தேர்வான, 8,718 பட்டதாரி ஆசிரியர்களுக்கு, மாவட்டத்திற்குள் பணி நியமனம் பெறுவதற்கான கலந்தாய்வு, நேற்று முன்தினம் நடந்தது.

அதில், 6,592 பேர், சொந்த மாவட்டத்திற்குள் பணியிடங்களை தேர்வு செய்தனர். நேற்று நடந்த, வெளி மாவட்டங்களுக்கான, பணி நியமன கலந்தாய்வில், 2,035 பேர் பங்கேற்றனர். வெளி மாவட்டத்தில் பணி என்பதால், பள்ளி அமைவிடம், போக்குவரத்து வசதி, தொலைவு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து, அதன்பிறகே, பள்ளியை தேர்வு செய்தனர். இதனால், கலந்தாய்வு விறுவிறுப்பில்லாமல், சற்று மந்தமாக நடந்தது. சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த, 165 பேர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளை தேர்வு செய்தனர்.

மாலை வரை நடந்த கலந்தாய்வில், 2,035 பேரும், பணியிடங்களை தேர்வு செய்தனர். சிறுபான்மை மொழிப் பாடங்களுக்கான, 91 பட்டதாரி ஆசிரியர் பட்டியலை, டி.ஆர்.பி., இன்னும் வெளியிடவில்லை. இதனால், தேர்வு பெற்ற ஆசிரியர்கள், தவிப்பிற்கு ஆளாகி உள்ளனர். இந்த பட்டியலை, டி.ஆர்.பி., வழங்கினால், அவர்களுக்கும் பணி நியமன கலந்தாய்வை நடத்த தயாராக இருக்கிறோம் என, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment