10 ஆம் வகுப்பு தேர்வெழுதும் மாணவ, மாணவியர் தங்களைப்பற்றிய விவரங்களை இணைய தளத்தின் வழியே பதிவு செய்ய வேண்டும் என்று தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
தேர்வுத்துறை இணையதளத்தில், ஒவ்வொரு மாணவர்களும் அவர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள பாஸ்வேர்டை செலுத்தி, தங்களைப்பற்றிய விவரங்களை, புகைப்படத்துடன், வருகிற ஜனவரி 4 ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். மேலும் மாணவர்கள் பதிவு செய்த தகவல்கள் சரியாக உள்ளதா என்பதை பள்ளி தலைமை ஆசிரியர் சரிபார்க்க வேண்டும் என்றும் தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட தகவல்கள் அனைத்தும் தகவல் தொகுப்பு விவர மையத்திற்கு அனுப்பப்பட உள்ளது.
பின் தேர்வெழுதும் மாணவ மாணவியர் குறித்து விவர பட்டியல் தேர்வுத்துறைக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த புதிய திட்டத்தால் தேர்வுப் பணிகள் பெரும் அளவிற்கு குறைக்கப்படுள்ளதாக தேர்வுத்துறை வட்டாங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment