ரெயில்வே நிலையங்களை சுத்தமாக வைத்திருக்க உதவுங்கள் என்று கூறிக்கூறி ரெயில்வே துறைக்கு சலித்து விட்டதால், ரெயில்வே நிர்வாகம் கடந்த வெள்ளிக்கிழமை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவின்படி, ரெயில்களின் உள்ளே போஸ்டர் ஒட்டுபவர்கள், வியாபாரம் செய்பவர்கள், அசுத்தப்படுத்துபவர்கள் ரூ. 500 அபராதம் கட்ட நேரிடும்.
மேலும் ரெயில் நிலைய நடைமேடைகளில் குப்பை போடுதல், சிறுநீர் கழித்தல், குளித்தல், பாத்திரம் கழுவுதல், துணி துவைத்தல் போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களையும் பிடித்து ரூ. 500 அபராதம் விதிக்க வேண்டும் என ரெயில்வே துறையின் தலைமை அலுவலகம், மண்டல அலுவலகங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த அபராத நடவடிக்கை விரைவில் செயல்படுத்தப்படும். ரெயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டர், டிக்கெட் பரிசோதகர் ஆகியோர் அபராதம் விதிக்கும் அதிகாரம் படைத்தவர்கள் எனவும் அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment