அரசு பொது தேர்வு எழுதும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, தவறில்லாத மதிப்பெண் பட்டியல் வழங்க, தேர்வுத்துறை வெளியிட்டுள்ள, "ஆன்-லைன்' பட்டியலில், மாணவரின் விவரங்களை சரி பார்த்து, அந்தந்த தலைமையாசிரியரே திருத்தம் செய்து கொள்ள, தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும், பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களை, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கொடுத்த தகவலின் அடிப்படையில், பள்ளி தேர்வு துறை சரிபார்த்து, பட்டியல் தயாரித்துள்ளது.
இதில், ஆன்-லைன் மூலம், ஒவ்வொரு பள்ளிக்கும் தரப்பட்டிருக்கும், "ரகசிய சொல்லை' தலைமையாசிரியர்கள் பயன்படுத்தி, திருத்தம் செய்து கொள்ளலாம். இது தொடர்பாக, தேர்வுத்துறை கூறியிருப்பதாவது: தேர்வு எழுதுபவரின் பெயர், பிறந்த தேதி, இனம், மொழி, தேர்வு எழுதும் மொழி ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். மாணவரின் புகைப்படம், மாறாமல் இடம் பெற்றிருக்க வேண்டும். தேர்வு எழுதுவோரின் குரூப் எண், பாட எண் வரிசையாக உள்ளதா என்பதை, தலைமையாசிரியர்கள் சரிபார்க்க வேண்டும். இதில் தவறு இருப்பின், ஆன்- லைனில் வெளியிடப்பட்டுள்ள சரிபார்ப்பு பட்டியலில் திருத்தங்கள் செய்து கொள்ளலாம்.
மையத்தின் பெயர், எண் மற்றும் பள்ளி எண் ஆகிய மூன்றில், எவ்விதமான திருத்தங்களை செய்ய கூடாது. இதன் மூலம், மாணவர்களுக்கு தவறில்லா மதிப்பெண் பட்டியல் வழங்க முடியும். இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது
No comments:
Post a Comment