உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ஆசிரியர்கள் நேற்று திருப்பூர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் ஏஇஓ.,அதிரடியாக மாற்றப்பட்டார். திருப்பூர் வடக்கு உதவித் தொடக்கக் கல்வி அலுவலராக இருப்பவர் குருசாமி.
இவர் ஆசிரியர்களை மனம் புண்ப டும்படி பேசுவதாக ஆசிரியர்கள் புகார் கூறினர். இதையடுத்து, இவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கடந்த நவம்பர் 8ம் தேதி திருப்பூர் குமரன் சிலை முன்பு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது. ஆனால் உதவி தொட க்கக் கல்வி அலுவலர் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை திருப்பூர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகத்தை பெண்கள் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் திடீர் என முற்றுகையிட்டனர்.
தொடர்ந்து அங்கிருந்த தொடக்கக் கல்வி அலுவலர் (பொறுப்பு) கரோலினிடம், நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். அவரும் விசாரி த்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். ஆனால் நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டத்தை கைவிட முடியாது என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையை அடுத்து, சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு போராட்டம் கைவிடப்பட்டது. இதையடுத்து, தொடக்க கல்வி அலுவலர் குருசாமி காரமடைக்கு மாற்றப்பட்டார்.
No comments:
Post a Comment