இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, December 11, 2012

தொழிலாளர்களின் சம்பளத்துடன், அவர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு சலுகைகளுக்கான ஊதியத்தையும் அடிப்படை சம்பளத்துடன் சேர்த்து பி.எப். தொகையில் பிடித்தம் செய்வதற்கான புதிய சுற்றறிக்கையை தொழிலாளர்கள் வைப்பு நிதி நிறுவனம் அனுப்பி உள்ளது. இதன் காரணமாக தொழிலாளர்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்படும் சம்பளத் தொகை ( Take Home Salary) குறைந்து,பி.எப். கணக்கில் சேர்க்கப்படும் தொகை அதிகமாகும்.
தற்போது அரசு ஊழியர்கள்,வங்கிப் பணியாளர்கள்,பல்வேறு தனியார் நிறுவனங்கள்-குறிப்பாக ஐ.டி. நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு வழங்கும் சம்பளத்தின் அடிப்படை சம்பளம் மற்றும் கருணை தொகையில் ( Basic salary & Dearness allowance ) 12 சதவீதத்தை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி(Employees Provident Fund )யாக பிடித்தம் செய்து,அத்தொழிலாளர்கள் வேலையை விட்டு செல்லும்போதோ அல்லது ஓய்வு பெறும்போதோ, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் செலுத்தும் அதே பங்களிப்பு தொகையையும் சேர்த்து, வட்டியுடன் வழங்கப்படும். இந்நிலையில்  கடந்த நவம்பர் 30 ஆம் தேதி தொழிலாளர்கள் வைப்பு நிதி நிறுவனம், நாடு முழுவதுமுள்ள தங்களது கிளை அலுவலகங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தொழிலாளர்கள் தங்களுக்கு வீட்டுக்கு எடுத்துச் செல்லும் சம்பள தொகையில் பி.எப். பிடித்தம் அதிகமாக போகாத அளவுக்கு, அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தின் மொத்த தொகையில், ஏறக்குறைய சரிபாதியை வீட்டு வாடகை, குழந்தைகளுக்கான கல்வி கட்டணம், போக்குவரத்து படிகள் போன்ற இதர சலுகைகளாக காண்பித்து நிறுவனங்கள் வழங்குவதாகவும், இதனால் பி.எப்.-க்காக பிடித்தம் செய்யப்படும் சதவீதம் குறைவதாக குறிப்பிட்டுள்ளது. 

எனவே இனிமேல் தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளத்துடன் வழங்கப்படும் இதர சலுகைகளுக்கான தொகையையும் சேர்த்து பி.எப். பிடித்தத்தில் சேர்க்குமாறு நிறுவனங்களுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளதாக பி.எப். அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய விதிமுறை அமலுக்கு வந்தால்,இதர சலுகைகளுடன் சம்பளம் பெறும் தொழிலாளர்கள், தங்களது வீட்டிற்கு எடுத்துச் செல்லும் சம்பளத்தின் அளவு குறையும்.அதாவது தற்போது பிடித்தம் செய்யப்படும் பி.எப். தொகையின் அளவு,ஏறக்குறைய இன்னொரு மடங்கு அதிகரிக்கும். நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிற விலைவாசியில்,இன்றைய பிரச்னைக்கு தீர்வு இல்லாமல்,என்றோ வரும் சேமிப்புக்காக பி.எப். என்ற போர்வையில் சம்பளத்தில் மேலும் பிடுங்கிக்கொள்வது,வாங்குகிற சம்பளமே போதாமல் தடுமாறிக்கொண்டிருக்கும் நடுத்தர வர்க்க தொழிலாளர்களிடம் நிச்சயம் கொந்தளிப்பைத்தான் ஏற்படுத்தும்.

இதை சரிக்கட்ட சில நிறுவனங்கள் வேண்டுமானால் இழப்பு ஏற்படும் தொகையை, ஊதிய உயர்வாக வழங்கலாம்.ஆனால் எல்லா நிறுவனங்களும் அப்படி வழங்க முன்வருமா என்பது கேள்விக்குறிதான்...!   அதே சமயம்வாங்கும் எல்லா சம்பளத்தையும் செலவழித்துவிடும் தொழிலாளர்களுக்கு, இது ஒரு கட்டாய சேமிப்பாக இருப்பதால், அவர்களது வருங்காலத்திற்கு நிச்சயம் உதவுவதாகத்தான் இருக்கும் என்று தொழிலாளர்கள் நலத்துறை அமைச்சக  அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும் தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யும் பி.எப்,. தொகைக்கு சமமாக நிறுவனங்களும் செலுத்த வேண்டும் என்பதால், தொழிலாளர்களின் பி.எப். சேமிப்பு கணக்கு தொகை மேலும் அதிகரிக்கும் என்பதால் நிச்சயம் இது தொழிலாளர்களுக்கு தொலைநோக்கு அடிப்படையில் நன்மை பயக்கக்கூடியதுதான் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.  

No comments:

Post a Comment