:வங்கி நடைமுறை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பொது துறை வங்கிகளை தனியார் மயமாக்க முயற்சிக்கும் மத்திய அரசை கண்டித்தும், நாளை, ஒரு நாள் வேலை நிறுத்தத்திற்கு, பொதுத்துறை வங்கி பணியாளர் சங்கங்கள், அழைப்பு விடுத்துள்ளன.
இதே போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆகஸ்ட் மாதம், 2 நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட வங்கிகள், நேற்று மீண்டும் வேலைநிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன. வேலைநிறுத்தத்திற்கு, அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம், இந்திய வங்கிகளின் பணியாளர் கூட்டமைப்பு, அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம், தேசிய வங்கி ஊழியர்கள் யூனியன் ஆகிய, நான்கு சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொது சயலர், சி.எச்.வெங்கடாசலம் கூறியதாவது:வங்கி துறையை தனியார் மயமாக்க மத்திய அரசு முயற்சிக்கும் போதெல்லாம், அதை எதிர்த்து நாங்கள், போராடி வருகிறோம். மத்திய அரசின் இந்த முயற்சி, நாட்டின் பொருளாதாரத்திற்கோ அல்லது நாட்டிற்கோ, எந்த விதத்திலும் நன்மை அளிக்காது. அந்த வகையில், நாளை, ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.நாளைய போராட்டத்தில், நாடு முழுவதும், 5 லட்சம் வங்கி ஊழியர்கள் ஈடுபட உள்ளனர். இதனால், வங்கிப் பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது
No comments:
Post a Comment