வளரிளம் பருவ மாணவ, மாணவியர் இடையே ரத்தசோகை ஏற்படாமல் தடுக்கும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் பிளஸ்2 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு போலிக் அமிலம் அடங்கிய இரும்பு சத்து மாத்திரைகள் வாரந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் 2,11,000 ஆசிரியர்களும், 66 லட்சம் மாணவர்களும் பயனடைகின்றனர். இதில், 15,642 ஆசிரியர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். மீதம் உள்ள 1,95,360 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க மாநில கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
No comments:
Post a Comment