, சிறுபான்மையினருக்காக 5 புதிய பல்கலைக்கழகங்களை மத்திய அரசு தொடங்குகிறது. 5 புதிய பல்கலைக்கழகங்கள் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி கே.ரகுமான்கான், டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
பல்வேறு பிற அமைச்சகங்களைப் போன்று சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகமும் 5 பல்கலைக்கழகங்களை தொடங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சிறுபான்மையினரின் நலன்தான் இந்தப் பல்கலைக்கழகங்களை தொடங்குவதின் நோக்கம். சிறுபான்மையினருக்கு கல்வி வழங்கத்தான் இந்த 5 பல்கலைக்கழகங்களையும் எங்கள் அமைச்சகம் தொடங்குகிறது. இந்த பல்கலைக்கழகங்கள் எந்த மதத்தினையும் மையமாகக் கொண்டிருக்காது.
No comments:
Post a Comment