வி.ஏ.ஒ. காலி பணியிடங்களை நிரப்புவதற்கான, ஐந்தாம் கட்ட கவுன்சிலிங், வரும்,16ம் தேதி நடக்க உள்ளது என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த செய்தி குறிப்பு: வி.ஏ.ஒ. தேர்வுக்கு, தேர்வு செய்யப்பட்ட, 1,781 விண்ணப்பதாரர்களுக்கு, நான்கு கட்ட கவுன்சிலிங் மூலம் பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள, 89 காலி பணியிடங்களை, நிரப்புவதற்கான, ஐந்தாம் கட்ட கவுன்சிலிங் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணி, வரும், 16ம் தேதி, காலை, 8:30 மணி முதல், டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் நடக்க உள்ளது.
கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்டுள்ள, விண்ணப்பாதாரர் விவரம் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கவுன்சிலிங் வருவோர், உரிய சான்றிதழ்களை, தவறாமல் கொண்டு வர வேண்டும் என, அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையில் உதவி ஆய்வாளர் பதவிக்கான நேரடி தேர்வு, சென்னை, கோவை, மதுரை, சேலம், தஞ்சாவூர், திருச்சி, நெல்லை, வேலூர், விழுப்புரம் ஆகிய ஒன்பது தேர்வு மையங்களில், வரும், 7ம் தேதி காலை மற்றும் மதியம் நடக்க உள்ளது. விண்ணப்பதாரர்கள், ஹால் டிக்கெட்டை, தேர்வாணைய வலைதளங்களான, www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.net லிருந்து, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதில், சந்தேகம் இருப்பின், தேர்வாணையத்தின் குறை தீர்க்கும் மையத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண், 18004251002 மூலம் தொடர்பு கொள்ளலாம். உதவி அரசு குற்றவியல் வழக்கறிஞர் பணி,மீன் வளத்துறை ஆய்வாளர் மற்றும் உதவி ஆராய்ச்சியாளர் பணிக்கான இறுதி தேர்வு பட்டியல், 3ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment