ு இலவச கட்டாயக் கல்வி பெறும் உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிக் கூடங்களில் ஏழை மாணவர்களுக்கான 25 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு மே 2 முதல் 14 வரை மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான கால அட்டவணை மற்றும் வழிகாட்டுதல்கள் அடங்கிய அரசு ஆணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
அதில், குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி பெறும் உரிமைச் சட்டம் 2009 பிரிவு 12(1) மற்றும் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி பெறும் உரிமை தமிழ்நாடு சட்டம் 2011 விதிகள் 8 மற்றும் 9 ஆகியவற்றின் கீழ் சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளில் (சி.பி.எஸ்.சி. மற்றும் ஐ.சி.எஸ்.இ. உள்பட) தொடக்க வகுப்புகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இடங்களை ஒதுக்கீடு செய்யவேண்டும். இவற்றை கண்காணிக்க மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது
. இந்த மாணவர்கள் சேர்க்கை குறித்த மாணவர் சேர்க்கை விண்ணப்ப விநியோகம் குறித்த அறிவிப்பை ஒவ்வொரு ஆண்டும் மே 2ஆம் தேதி பள்ளிகள் வெளியிட வேண்டும். மே 3 ம் தேதி முதல் 9ஆம் தேதி வரை விண்ணப்பப் படிவங்கள் விநியோகிக்கப்பட வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மே 9 ம் தேதி மாலை 5 மணி வரை பெறப்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment