இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, April 04, 2017

பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை:கால்நடை மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வு கிடையாது துணைவேந்தர் பேட்டி


கால்நடை மருத்துவ படிப்பில் சேர ‘நீட்’ தேர்வு கிடையாது என்றும், பிளஸ்–2 மதிப்பெண் அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் தமிழ்நாடு கால்நடை அறிவியல் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் எஸ்.திலகர் தெரிவித்தார்.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் எஸ்.திலகர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–

‘நீட்’ தேர்வு இல்லாமல் மாணவர் சேர்க்கை

கால்நடை மருத்துவ படிப்பில் சேர வழக்கம் போல பிளஸ்–2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். கால்நடை மருத்துவம் மற்றும் உணவு தொழில்நுட்பம் உள்ளிட்ட இளநிலை படிப்புகளில் சேர 380 இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் மாணவர் சேர்க்கை வழக்கம் போல கலந்தாய்வு மூலம் நடைபெறும்.

விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் நிரப்பி பின்னர் அதை பதிவிறக்கம் செய்து அனுப்ப வேண்டும். விண்ணப்ப முறை முழுக்க முழுக்க ஆன்லைன் கிடையாது. இந்த படிப்பில் சேர ‘நீட்’ தேர்வு கிடையாது. வழக்கம் போல பிளஸ்–2 மதிப்பெண் அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

தரவரிசை பட்டியல்

மேலும் மனித வளமேம்பாட்டு அமைச்சகம் இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களின் தேசிய அளவிலான தரவரிசை பட்டியலை வெளியிட்டது. இந்த ஆய்வில் 1007 என்ஜினீயரிங் கல்லூரிகள், 542 மேலாண்மை கல்லூரிகள், 535 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 316 மருந்தியல் கல்வி நிறுவனங்கள், 200 பல்கலைக்கழகங்கள் ஆக மொத்தம் 2 ஆயிரத்து 600 கல்வி நிறுவனங்கள் பங்கு பெற்றன.

பல்கலைக்கழகங்களுக்கான மதிப்பீட்டில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தேசிய அளவில் 38–வது இடத்தை பெற்றது. ஆனால் மாநில அளவில் 4–வது இடத்தை பிடித்தது. மேலும் கல்வி மற்றும் கல்வி கற்றலுக்கான சூழல்களை வழங்கிடும் விதத்தில் தேசிய அளவில் 6–வது இடத்தையும், மாநில அளவில் 2–வது இடத்தையும் பிடித்து இருக்கிறது.

முதல் இடம்

இந்தியாவில் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகங்கள் 14 உள்ளன. அந்த பல்கலைக்கழகங்களில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தேசிய அளவிலும், மாநில அளவிலும் முதல் இடத்தை பெற்றுள்ளது.

இவ்வாறு துணைவேந்தர் டாக்டர் எஸ்.திலகர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment