இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, April 28, 2017

சைதை துரைசாமியின் மனிதநேயம் மையம் நடத்தும் சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வுக்கான பயிற்சி வகுப்பு


பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி தலைமையில் செயல்படும் மனிதநேயம் பயிற்சி மையம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற சிவில் சர்வீசஸ் தேர்வு உள்பட மத்திய–மாநில அரசு பணிகளுக்கான பல்வேறு தேர்வுகளில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு இலவச வகுப்பு நடத்தி வருகிறது.

அந்த வகையில், 2018–ம் ஆண்டு நடைபெற உள்ள சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வுக்காக இப்போது முதல் 2018–ம் ஆண்டு மே மாதம் வரை இலவச பயிற்சி அளிக்க திட்டமிட்டு உள்ளது. இந்த இலவச பயிற்சி பெறும் மாணவர்களை தேர்ந்தெடுக்க தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்ட தலைநகரங்களில் வருகிற 30–ந்தேதி நுழைவு தேர்வு நடப்பதாக இருந்தது. 7–ந்தேதி நுழைவுத்தேர்வு நுழைவு தேர்வு நடைபெறும் அதே நாளில் ஆசிரியர் தகுதித்தேர்வு மற்றும் பாரத ஸ்டேட் வங்கி தேர்வு நடைபெற உள்ளதால் பல மாணவர்கள் நுழைவுத்தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். பலர் சைதை துரைசாமியை நேரில் சந்தித்தும் வேண்டுகோள் விடுத்தனர்.

மாணவ–மாணவிகளின் வேண்டுகோளை ஏற்று சைதை துரைசாமி சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வுக்கான பயிற்சி வகுப்பு நுழைவுத்தேர்வை மே 7–ந்தேதிக்கு தள்ளிவைத்து இருக்கிறார். இதுமட்டுமல்லாமல் இந்த பயிற்சி வகுப்பில் மேலும் விண்ணப்பிக்க விரும்புவோர் www.saidais.com என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மே மாதம் 5–ந்தேதி. அனுமதி சீட்டு ஏற்கனவே நுழைவுத்தேர்வுக்கு தங்களுடைய அனுமதி சீட்டினை பதிவிறக்கம் செய்தவர்கள் அதே அனுமதி சீட்டுடன் அதற்குரிய தேர்வு மையத்திலேயே தேர்வு எழுதலாம். புதியதாக விண்ணப்பிப்பவர்கள் நுழைவுத்தேர்வுக்கான அனுமதி சீட்டை www.saidais.com என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து தங்களுடைய சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி, அரசு அதிகாரிகளிடம் கையெழுத்து பெறவேண்டும்.

அரசு அதிகாரிகளிடம் கையெழுத்து பெறமுடியாதவர்கள் தங்களுடைய புகைப்படம் உள்ள அடையாள அட்டையை அனுமதி சீட்டுடன் கொண்டுவர வேண்டும். இதுவே அனுமதி சீட்டு ஆகும். மேற்கண்ட தகவல் சைதை துரைசாமியின் மனிதநேயம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment