இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, April 04, 2017

ஸ்மார்ட்' ரேஷன் கார்டில் இனி பெண்கள் 'ராஜ்யம்'


பெரும்பாலான 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டுகளில் கணவர் இருந்தும் மனைவிகளே குடும்பத் தலைவராக இடம்பெற்றுள்ளனர். மேலும் பெயர், முகவரி என, அனைத்திலும் குளறுபடியாக உள்ளது.இதில் ரேஷன் கார்டுடன் ஆதாரை இணைத்து 'ஸ்மார்ட்' கார்டு ஏப்., 1 முதல் வினியோகிக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான 'ஸ்மார்ட்' கார்டுகளில் கணவர் இருந்தும் மனைவிகளே குடும்பத் தலைவராக இடம் பெற்றுள்ளனர்.

மேலும் ஆதாரில் உள்ள விபரங்களே பதியப்பட்டுள்ளதால், பல குளறுபடிகளும் அரங்கேறியுள்ளன. குடும்பத் தலைவராக இடம்பெற்ற பெண்களுக்கு அவரது தந்தை ஊரின் முகவரியே உள்ளது. இதனால் பலரது கார்டுகளில் பெயர், மாவட்டம், தாலுகாக்கள் மாறியுள்ளன. ஏராளமான எழுத்து பிழைகளும் உள்ளன. இதுகுறித்து கேட்ட கார்டுதாரர்களிடம் வழக்கம்போல் 'எங்களுக்கு ஒன்றும் தெரியாது,' என கூலாக, வழங்கல்துறை அலுவலர்கள் பதிலளித்து வருகின்றனர். கார்டுதாரர்கள் கூறுகையில், ' கணவர் வெளிநாட்டில் இருந்தால் (அ) இறந்தால் தான் குடும்பத் தலைவராக மனைவி இடம் பெறுவர். ஆனால் கணவர் ஊரில் இருந்தும் 'ஸ்மார்ட்' கார்டில் குடும்பத் தலைவராக பெண்கள் புகைப்படத்தை பதிவு செய்துள்ளனர்,' என்றனர். வழங்கல்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: 'ஸ்மார்ட்' கார்டுகள் தனியார் நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்டதால் ஏராளமான தவறுகள் உள்ளன.

ரேஷன்கார்டுகள் வழங்கும் பணி முழுவதும் கணினிமயமாகி விட்டது. இதனால் நாங்கள் திருத்தம் செய்ய முடியாது. 'ஆன்லைன்' மூலம் தான் 'ஸ்மார்ட்' கார்டில் திருத்தம் செய்ய முடியும். விரைவில் அதற்கான உத்தரவு வரும் என, எதிர்பார்க்கிறோம், என்றார்.

No comments:

Post a Comment