தமிழ்நாட்டில் 570-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகள் ஆகிய அனைத்து கல்லூரிகளும் அடங்கும். இக்கல்லூரிகளில் வழங்கப்படும் பிஇ, பிடெக் படிப்புகளில் தோராயமாக 2 லட்சம் பிஇ, பிடெக் இடங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 12-ம் தேதி வெளியாகின்றன. இந்த நிலையில், இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க மே 1 முதல் 31 வரை ஆன்லைனில் பதிவு செய்யலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதன்படி, பொறியியல் படிப்பில் சேருவதற்கான ஆன்லைன் பதிவு நாளை (திங்கள்கிழமை) தொடங்குகிறது. இதுபற்றிய அறிவிக்கை நாளிதழ்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிடப்படுகிறது. இந்த அறிவிக்கை அண்ணா பல்கலைக் கழகத்தின் இணையதளத்திலும் (www.annauniv.edu) வெளியாகும்.
பிளஸ் 2 தேர்வு முடிவு வருவதற்கு இன்னும் 12 நாட்கள் உள்ள நிலையில், அடிப்படை விவரங்களை முன்கூட்டியே பதிவு செய்து விட்டால் தேர்வு முடிவு வந்த பிறகு மதிப்பெண் உள்ளிட்ட எஞ்சிய விவரங்களை பதிவு செய்து விரைந்து விண்ணப்பிக்க வசதியாக இருக்கும். மதிப்பெண் உள்ளிட்ட அனைத்து விவரங் களையும் குறிப்பிட்டு ஆன்லைன் பதிவை முழுமை செய்த பின்னர் ஆன்லைன் விண்ணப் பத்தை பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் தேவையான ஆவணங் களை இணைத்து ஜுன் 3-ம் தேதிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அண்ணா பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
No comments:
Post a Comment