மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி, மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் ஆய்வாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்த ஆண்டு கோடை காலத்தில் வெயில் மற்றும் வெப்பம் அதிகமாக இருக்கும் என்பதால் கடந்த 21ம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் பள்ளிகள் செயல்படாது.
இது குறித்து ஏற்கெனவே அனைத்து மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் ஆய்வாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், சில மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் 20ம் தேதிக்கு பிறகும் இயங்குவதாகவும், சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாகவும் புகார்கள் வருகின்றன. மேலும் பள்ளிச் சீருடை, அடையாள அட்டை ஆகியவற்றை தவிர்த்து பள்ளிக் குழந்தைகளை பள்ளிக்கு வரவேண்டும் என்று பள்ளி நிர்வாகத்தினர் வற்புறுத்துவதாக புகார்கள் வருகின்றன.
மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநரால் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையை மீறி பள்ளிகள் செயல்படுவது கண்டிக்கத்தக்கது. அரசு வழங்கியுள்ள வழிகாட்டுதல்கள், மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் அனுப்பிய சுற்றறிக்கை ஆகியவற்றை மீறி மெட்ரிக் பள்ளிகள் செயல்பட்டால் அந்த பள்ளிகள் மீது துறைவாரியான நடவடிக்கை எடுக்கப்படும். இதையும் மீறி பள்ளிகள் செயல்பட்டால் அது தொர்பாக மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்களின் போதிய கண்காணிப்பு இல்லை என்பதை காட்டுவதாக இருக்கும். அதனால் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த கடிதத்தில் இயக்குநர் கருப்பசாமி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment