தமிழகத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 80 அணைகளில் 15 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளது. அதே போன்று தமிழகம் முழுவதும் 14 ஆயிரம் ஏரிகளில் 10 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு இருக்கிறது. இதனால், பாசனம் மற்றும் குடிநீர் தட்டுபாட்டு தமிழகம் முழுவதும் நிலவி வருகிறது. இதற்கு பருவமழை பொய்த்தது முக்கிய காரணம் என்றும், கர்நாடக, ஆந்திர, கேரள அரசுகள் காரணம் என்றும் தமிழக அரசு கூறி வருகிறது.
ஆனால் முக்கியமான காரணம் தமிழக அரசுதான் என்கிற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது, கடந்த 2015ல் தமிழகம் முழுவதும் சராசரி மழையை காட்டிலும் 190 சதவீதம் அதிகமாக மழை பெய்தது. இந்த மழை நீரை ஆற்றில் குறுக்கே தடுப்பணை மூலம் தமிழக அரசு தடுத்திருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் தண்ணீர் நிலத்தில் ஊறுவதுடன், நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்தே இருந்து இருக்கும். ஆனால், தமிழக அரசு நடவடிக்கை எடுக்காமல் கடந்த 6 ஆண்டுகளாக தூங்கி வருகிறது. இதனால், கடந்த 2015ல் பெய்த மழையில் 260 டிஎம்சி வரை வெள்ள நீர் வீணாக கடலில் கலந்தது. இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
2015ல் வடகிழக் பருவமழையை 1120 மி.மீ அதாவது சராசரியை காட்டிலும் 190 சதவீதம் பெய்தது. ஆனால், இந்த மழை நீரை சேமிப்பதற்கு தடுப்பணை கட்ட எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், 260 டிஎம்சி வெள்ள நீர் கடலில் கலந்தது. குறிப்பாக, 5524 சதுர கி.மீ பரபரப்பளவை கொண்ட கொசஸ்தலையற்று படுகையில் சராசரியாக 1215 மீ.மீ சராசரி மழை அளவு ெபய்தால் 31.4 டிஎம்சி வரை தண்ணீர் கிடைக்கும். இதில், 6.4 டிஎம்சி உபரியாக கடலில் கலக்கிறது. இதே போன்று 10.656 சதுர கி.மீ பரபப்பு கொண்ட பாலாற்று படுகையில் 1165 மி.மீ மழை பெய்தால் 76 டிஎம்சி வரை கிடைக்கிறது. இதில், 24.4 டிஎம்சி வரை கடலில் கலக்கிறது.
இதே போன்று 5969 சதுர கி.மீ பரபரப்பளவு கொண்ட தாமிரபரணி ஆற்றுப்படுகையில் 889 மி.மீ மழை பெய்தால் 60 டிஎம்சி வரை கிடைக்கிறது. இதில் 24 டிஎம்சி வீணாகிறது. 44,016 சதுர கி.மீ பரபரப்புளவு கொண்ட காவிரி ஆற்றுப்படுகையில் சராசரியாக 1000 மி.மீ மழை பெய்தால் 249 டிஎம்சி கிடைக்கிறது. இதில் 103 டிஎம்சி வரை கடலில் கலக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment