ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள உடற்கல்வி, தையல், ஓவியம், இசை ஆசிரியர் காலிப்பணியிடத்துக்கு பரிந்துரைக்கப்படும் வேலை வாய்ப்பு பதிவு மூப்பு பட்டியலை சம்பந்தப்பட்ட சிறப்பு ஆசிரியர்கள் சரிபார்த்துக்கொள்ளுமாறு ஆட்சியர் கு.கோவிந்தராஜ் கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி:
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் உடற்கல்வி, தையல், ஓவியம், இசை உள்ளிட்ட சிறப்பு ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்காக வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமாக பதிவு மூப்பு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதை சிறப்பு ஆசிரியர்கள் சரிபார்த்துக்கொள்ளலாம். உடற்கல்வி ஆசிரியர் பணிக்கு கீழ்நிலை, மேல்நிலை உடற்கல்வி ஆசிரியர் சான்றிதழ் அல்லது உடற்கல்வி ஆசிரியர் பட்டப்படிப்பு(பி.பிஎட்) படித்திருக்க வேண்டும். இசை ஆசிரியர் பணிக்கு, இசையில் பட்டப்படிப்பு அல்லது சங்கீத பூஷன்அல்லது சங்கீத வித்வான் தகுதியுடன் இசையில் தொழில் ஆசிரியர் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். தையல் ஆசிரியர் பணிக்கு தொழில்நுட்ப தையல் ஆசிரியர் அல்லது ஆடை வடிவமைப்பில் பட்டக்கல்வி (டி.டி.சி. டெய்லரிங்) பயின்றிருக்க வேண்டும். ஓவிய ஆசிரியர் பணிக்கு தொழில்நுட்ப ஓவிய ஆசிரியர் அல்லது ஓவியத்தில் பட்டப் படிப்பு, பட்டயப் படிப்பு அல்லது மாமல்லபுரம் அரசு சிற்பக் கல்லூரியால் வழங்கப்பட்ட சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
இப்பணியிடங்களுக்கு குறைந்தபட்ட வயது வரம்பு 18 (1.7.2013 நிலவரப்படி) ஆகவும், அதிகபட்சம் 57 வயதாகவும் இருக்கலாம். சிறப்பு ஆசிரியர்கள் தங்கள் பதிவு மூப்புப் பட்டியலை திருப்பூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் சரிபார்த்துக்கொள்ளலாம் என்றார்.
No comments:
Post a Comment