இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Sunday, June 30, 2013

தொழிலாளர் சேமநல நிதியில் புதியமுறை

தொழிலாளர் சேமநல நிதியை மாற்றுவது மற்றும் அதிலிருந்து பணம் பெறுவது போன்றவை, இந்த மாதம் முதல் வாரம் முதல், ஆன்-லைன் முறையில் நடைபெறஉள்ளன. இதுதொடர்பாக, தொழிலாளர் சேமநல நிதி அமைப்பின், மத்திய சேமநல நிதி ஆணையர் ஜலான் கூறியதாவது: தொழிலாளர் சேமநல நிதி அமைப்பில், ஐந்து கோடி சந்தாதாரர்கள் உள்ளனர். இவர்கள் தங்களின் கணக்கில் உள்ள நிதியை மாற்றுவது மற்றும் அதிலிருந்து பணம் பெறுவது போன்றவற்றை, தற்போது, விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்து, அதன்மூலம் பெறுகின்றனர். வரும், 3 அல்லது 4ம் தேதி முதல், விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டியதில்லை. அதற்குப் பதிலாக, ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்தே, இந்த பணிகளை முடித்துக் கொள்ளலாம். இவ்வாறு, ஜலான் கூறினார்.

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று (திங்கட்கிழமை) கடைசி நாளாகும்.

ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாய கல்வி சட்டத்தின் படி இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக் கான தகுதித்தேர்வு கடந்த ஆண்டு நடத்தப்பட்டது. அதுபோல் இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 17, 18ந் தேதிகளில் தேர்வு நடக்கிறது. இதற்கான அறிவிப்பை ஆசி ரியர் தேர்வு வாரியம் வெளி யிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கடந்த 17ந் தேதி முதல் விண்ணப்பங்கள் வினி யோக்கிக்கப்பட்டு வருகிறது.

பூர்த்தி செய்த விண்ணப்பங் களை இன்று(திங்கட்கிழமை) மாலை 5½ மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இன்று கடைசி நாள் திருப்பூர் மாவட்டத்தில் பூர்த்தி செய்த விண்ணப்பங் களை பெறுவதற்காக திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண் கள் மேல்நிலைப்பள்ளியில் மட்டுமே மையம் அமைக்கப் பட்டுள்ளது. இதுவரை 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் விற்றுத் தீர்ந்துள்ள நிலையில், நேற்று முன்தினம் வரை 10 ஆயிரத்துக்கும் குறைவான விண்ணப்பங்களே பூர்த்தி செய்யப்பட்டு ஒப்படைக்கப் பட்டு உள்ளன. இதனால் கடைசி நாளான இன்று (திங்கட்கிழமை) ஆயி ரக்கணக்கானோர் விண்ணப் பங்களை சமர்ப்பிக்க வருவார் கள் என்று எதிர்பார்க்கப்படு கிறது. எனவே கூட்டம் அதிக மாக இருந்தால் கூடுதலாக மையங் கள் திறக்கப்பட்டு, விண்ணப் பங்கள் வாங்கப்படும் என்று மாவட்ட கல்வி அதிகாரி ஜெயலட்சுமி தெரிவித்தார்.

கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான நெட் தகுதித்தேர்வு தமிழகம் உள்பட நாடு முழுவதும் நடந்தது. சென்னையில் 13 ஆயிரம் முதுகலை பட்டதாரிகள் தேர்வு எழுதினார்கள்.

‘நெட்’ தகுதித்தேர்வு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணியில் சேர வேண்டுமானால் பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) நடத்தும் நெட் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். மாநில அளவில் நடத்தப்படும் ஸ்லெட் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றால் குறிப்பிட்ட மாநிலத்தில் மட்டுமே பணியாற்ற முடியும். ஆனால், யு.ஜி.சி. நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் இந்தியாவில் உள்ள எந்த பல்கலைக்கழகத்திலும், எந்த கல்லூரியிலும் உதவி பேராசிரியர் பணியில் சேரலாம். நெட் தகுதித்தேர்வை யு.ஜி.சி. ஆண்டுக்கு இரண்டு தடவை (ஜூன் மற்றும் டிசம்பர்) நடத்துகிறது.

இந்த ஆண்டுக்கான முதல் நெட் தேர்வு தமிழகம் உள்பட நாடு முழுவதும் நேற்று நடந்தது. இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான முதுநிலை பட்டதாரிகள் தேர்வு எழுதினார்கள். சென்னையில் 13 ஆயிரம் பேர் தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்பட முக்கிய பெரு நகரங்களில் நெட் தேர்வு நடந்தது. சென்னையில் கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி, எத்திராஜ் மகளிர் கல்லூரி, டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கல்லூரி உள்பட 11 மையங்களில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதுகலை பட்டதாரிகள் தேர்வு எழுதினார்கள். காலையில் 9.30 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மதியம் 1.30 மணி முதல் மாலை 4 மணி வரையும் கொள்குறிவகையில் (ஆப்ஜெக்டிவ் முறை) 3 தேர்வுகள் நடைபெற்றன. தேர்வு முடிவுகள் விரைவில் யு.ஜி.சி.யின் இணையதளத்தில் வெளியிடப்படும்.

SABL/SALM moduels,card modification

Saturday, June 29, 2013

இந்த ஆண்டு முதல் அமலாகிறது மாணவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக கல்வி உதவித்தொகை

  இந்த ஆண்டு முதல் கல்வி உதவித்தொகை மாணவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக வழங்கப்படுகிறது. இது தொடர்பாக ஆவணங்களை மாணவர்களிடம் பெறுவது குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு சிறப்பு அறிவுரைகள் வழங்கப்பட்டன. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மாணவ,மாணவிகளுக்கு ஆண்டு தோறும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான கல்வி உதவித் தொகை பெற தகுதியுள்ள மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து கல்வி மாவட்ட அளவில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறப்பு ஆலோசனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

நெல்லை மாவட்டத்தில் சேரன்மகாதேவி கல்வி மாவட்ட 119 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  இதில் ஆகஸ்டு 31ம் தேதிக்குள் தகுதியுள்ள மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும் 6ம் வகுப்பு முதல் மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வி வரை பயிலுவதற்கு உரிய கல்வி உதவித்தொகை வழங்க பெற்றோரின் வருமான வரம்பு உள்ளிட்ட தகுதிகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதுவரை மாணவர்களுக்கு காசோலையாக வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித்தொகை இந்த ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் மாணவர்களின் வங்கி கணக்குகளில் நேரிடையாக சேர்க்கப்பட உள்ளது. இதற்காக மாணவர்களுக்கு வங்கி கணக்கு தொடங்குவது, ஜாதி சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களும் தாமதமின்றி வழங்க நடவடிக்கை எடுப்பது, விண்ணப்பங்களை பூர்த்தி செய்யும் முறை, விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள் உள்ளிட்டவை குறித்த ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க திங்கள்கிழமை (ஜூலை 1) கடைசி நாளாகும்.

ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள், இரண்டாம் தாள் தேர்வுகளுக்கு இதுவரை தமிழகம் முழுவதும் சுமார் 5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப விற்பனை ஜூன் 17-ம் தேதி தொடங்கியது. இந்த ஆண்டு கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டன.முதல் நாளிலேயே 1.48 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனையாகின. இதையடுத்து, கடந்த இரண்டு வாரங்களில் மொத்தம் 7.5 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன.

இதில் இன்று மாலை வரை சுமார் 5 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க கடைசி நாளான திங்கள்கிழமை(ஜூலை.1) ஏராளமானோர் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்களில் நேரில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் தேர்வு ஆகஸ்ட் 17-ம் தேதியும், இரண்டாம் தாள் தேர்வு 18-ம் தேதியும் நடைபெறுகிறது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக தமிழகத்தைச் சேர்ந்த பி.சதாசிவம் நியமிக்கப்பட்டுள்ளார்.

   தற்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து வரும் நீதிபதி அல்டமாஸ் கபீர் வருகின்ற ஜூலை மாதம் 18-ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து அவருக்கு பதில் புதிய தலைமை நீதிபதியாக தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி பி.சதாசிவம் நியமிக்கப்பட்டுள்ளார். அவரை மத்திய சட்ட அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலைவர் பிராணப் முகர்ஜி நியமனம் செய்துள்ளார். தற்போது இவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணிபுரிந்து வருகிறார்.

நீதிபதி பி.சதாசிவம் உச்ச நீதிமன்றத்தின் 40-வது தலைமை நீதிபதியாக வருகிற 19-ம் தேதி பதவி ஏற்கிறார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் எளிய நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். வருகிற 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27-ந் தேதி ஓய்வு பெறுகிறார். அதுவரை அவர் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகிப்பார்.

Friday, June 28, 2013

மாநில திட்ட இயக்குனர் மாற்றம்

அனைவருக்கும் கல்வித்திட்ட மாநில திட்ட இயக்குனர் திரு.முகமது அஸ்லாம் மாற்றப்பட்டு,  புதிதாக திரு.மகேஸ்வரன் (துணை கமிஷனர் சென்னை மாநகராட்சி) பொறுப்பேற்க உள்ளார்

ஏழாவது சம்பள கமிஷனை அமைக்காவிட்டால் விரைவில் வேலை நிறுத்தம்: ரெயில்வே தொழிலாளர் சம்மேளனம் எச்சரிக்கை

ரெயில்வே தொழிலாளர்களின் நலனுக்காக போராடி வரும் தொழிற்சங்கங்களில் 10.26 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட அகில இந்திய ரெயில்வே தொழிலாளர் சம்மேளனம் மிகப் பெரிய தொழிற்சங்கமாக கருதப்படுகிறது. நேற்று புதுடெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் ஷிவ் கோபால் மிஷ்ரா கூறியதாவது:

- ஏழாவது சம்பள கமிஷனை அமைக்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று அரசை நீண்ட காலமாக வற்புறுத்தி வருகிறோம். ரெயில்வே மந்திரி மல்லிகார்ஜுன் கார்கேவையும் சந்தித்து எங்கள் கோரிக்கையை தெரிவித்தோம். இது தொடர்பாக, பரிசீலிப்பதாக மட்டும் கூறிய அவர், எங்களுக்கு எந்த உத்தரவாதத்தையும் தரவில்லை. எனவே, எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி விரைவில் வேலை நிறுத்தம் செய்வது என்று முடிவெடுத்துள்ளோம். வேலை நிறுத்தத்திற்கான தேதியை இறுதி செய்வதற்காக இதர தொழிற்சங்கங்களுடன் பேசி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார். அகில இந்திய ரெயில்வே தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் பற்றி ரெயில்வே மந்திரி மல்லிகார்ஜுன் கார்கேயிடம் கேட்ட போது,

‘எனக்கு இதைப் பற்றி ஒன்றும் தெரியாது. நான் இப்போது தான் மந்திரியாக பொறுப்பேற்று உள்ளேன்’ என்று பதிலளித்தார்

எஸ்பிஐ ஏடிஎம் கார்டுக்கு சேவைக் கட்டணம் அமல்

் ஏடிஎம் அட்டையுடன் தொடர்புடைய எஸ்எம்எஸ் சேவைக்கு ஒரு காலாண்டுக்கு ரூ.15 கட்டணமாக ஆண்டுக்கு ரூ.60 வசூலிக்கும் புதிய திட்டத்தை பாரத ஸ்டேட் வங்கி அமல்படுத்தியுள்ளது. ஏடிஎம் கார்டில் பணம் எடுக்கும்போதும், செலுத்தும்போதும் வாடிக்கையாளர்களின் செல்பேசியில் வங்கி மூலம் எஸ்.எம்.எஸ். அனுப்பப்படுகிறது. எனவே "எஸ்எம்எஸ் சேவைக்கு கட்டணம்' என்ற பெயரில் ஏடிஎம் கார்டுக்கு சேவைக் கட்டணம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல், மே, ஜூன் என முதல் மூன்று காலாண்டுக்கு சேவைக் கட்டணம் ரூ.15-ஐ வாடிக்கையாளர்களின் கணக்கிலிருந்து வங்கி பிடித்தம் செய்துள்ளது.

முதல் கட்டமாக நாடு முழுவதும் உள்ள 68 லட்சம் வாடிக்கையாளர்களின் கணக்கிலிருந்து இந்தத் தொகை பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. முதலில் ஒவ்வொரு வாடிக்கையாளர் கணக்கிலிருந்தும் ரூ.15-ம், அதற்கு சேவை வரியாக ரூ.2-ம் என மொத்தம் ரூ.17 பிடித்தம் செய்ய அறிவுறுத்தப்பட்டது. அவ்வாறு சில வாடிக்கையாளர் கணக்கிலிருந்து ரூ.17 பிடித்தம் செய்யப்பட்டது. ஆனால், பின்னர் சேவை வரி வேண்டாம் என முடிவு செய்யப்பட்டுள்ளதால், ரூ.15 மட்டும் பிடித்தம் செய்யப்படுகிறது. தங்களது கணக்கிலிருந்து ரூ.17 பிடித்தம் செய்யப்பட்டவர்களுக்கு, ரூ.2-ஐ அவர்களது கணக்குக்கே திரும்ப அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என பாரத ஸ்டேட் வங்கியின் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏற்கெனவே ஏடிஎம் கார்டுக்கு ஆண்டு பராமரிப்புக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள ரூ.102 என்பது தொடரும் என்றும் அதிகாரிகள் கூறினர். ஓசையின்றி அமல்: பாரத ஸ்டேட் வங்கிக்கு நாடு முழுவதும் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன. அவற்றில் கோடிக்கணக்கானோர் சேமிப்புக் கணக்கு வைத்துள்ளனர். இவர்களில் 75 சதவீதம் பேர் ஏடிஎம் கார்டு வைத்துள்ளனர். இவர்கள் அனைவரிடம் இருந்தும் ஒரு காலாண்டுக்கு ரூ.15 வீதம் ஓர் ஆண்டுக்கு ரூ.60-ஐ சேவைக் கட்டணமாக பிடித்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எவ்வித முன்னறிவிப்பும் இன்றி தங்களது கணக்கிலிருந்து ரூ.15 அல்லது ரூ.17 பிடித்தம் செய்யப்பட்டிருப்பதைப் பார்த்து லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஊழியர்களுக்கு விலக்கு: பாரத ஸ்டேட் வங்கியின் ஊழியர்களுக்கும், அலுவலர்களுக்கும் இந்த சேவைக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நாளை "நெட்' தேர்வு : சென்னையில் 14 ஆயிரம் பேர் பங்கேற்பு

: யு.ஜி.சி.,யால் நடத்தப்படும், கல்லூரி விரிவுரையாளர் தகுதிக்கான தேசிய தகுதி தேர்வு(நெட்), சென்னையில், நாளை நடக்கிறது. பல்கலைக்கழக மானிய குழு (யு.ஜி.சி.,) மாநில தகுதி தேர்வை (ஸ்லெட்), ஆண்டுக்கு ஒரு முறையும், தேசிய தகுதி தேர்வை (நெட்), ஜூன், டிசம்பர் ஆகிய இரு மாதங்களிலும் நடத்துகிறது. "ஸ்லெட், நெட்' தேர்வுகளில் வெற்றி பெற்றவர் மட்டுமே, அரசு, அரசு உதவி பெறும் கல்லூரி மற்றும் தனியார் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணியில் சேர முடியும். இந்தாண்டிற்கான, "நெட்' நுழைவு தேர்வு, நாளை (30ம் தேதி), நாடு முழுவதும், 80 இடங்களில் நடக்கிறது.

தமிழகத்தில், சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய, நான்கு மண்டலங்களில் நடக்கிறது. சென்னையில், 11 மையங்களில், 14 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதுகுறித்து, பயிற்சி மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது: "நெட்' தேர்வு, மூன்று பிரிவுகளாக நடத்தப்படும். மொத்தம், 350 மதிப்பெண். முதல் தாளில், பொது அறிவு கேள்விகளும், இரண்டாவது மற்றும் மூன்றாவது தாளில் பாடப்பிரிவு சம்பந்தமான கேள்விகளும் கேட்கப்படும்.

தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், வணிகவியல், சமூக சேவை, இசை, சட்டம், இந்திய கலாசாரம், குற்றவியல், தொல்லியல், மானுடவியல் உள்ளிட்ட, 94 பாடங்களில், "நெட்' தேர்வை எழுதலாம். கேள்விக்கு தவறாக பதிலளித்தால், மதிப்பெண் குறைப்பு இல்லை. இவ்வாறு, அவர் கூறினார்.

ஆதிதிராவிடர் மாணவருக்கு கட்டண விலக்கு கல்வி நிறுவனங்களுக்கு அரசு உத்தரவு

கலந்தாய்வு மூலம், கல்லூரிகளில் சேரும், ஆதிதிராவிடர், பழங்குடியினர், மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிட மாணவ, மாணவியருக்கு, சுயநிதி கல்லூரிகளுக்கான கட்டண நிர்ணயக் குழு மற்றும் அரசு நிர்ணயிக்கும் கட்டணம், அரசால் வழங்கப்படும். தமிழகத்தில் உள்ள, அனைத்து சுயநிதி கல்வி நிறுவனங்களில், இலவசம், கட்டணம், நிர்வாக ஒதுக்கீட்டில் படிக்கும், ஆதிதிராவிடர், பழங்குடியினர், மதம் மாறிய கிறிஸ்தவ, ஆதிதிராவிட மாணவ, மாணவியருக்கு, சுயநிதி கல்லூரிகளுக்கான கட்டண நிர்ணயக்குழு மற்றும் அரசு நிர்ணயிக்கும் கட்டணம், கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், அரசால் செலுத்தப்படும்.

இவ்விவரம், அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும், தெரியப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது, கலந்தாய்வு மூலம், கல்லூரியில் சேர்க்கை நடைபெறும் பொறியியல், மருத்துவம், கல்வியியல் மற்றும் இதர படிப்புகளுக்கு, கட்டணம் வசூலிக்கக் கூடாது என, அரசு உத்தரவிட்டுள்ளது. தொடர்புடைய சுய நிதி கல்வி நிறுவனங்கள், தேவையான கட்டணங்களை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில், நேரடியாக பெற்றுக் கொள்ளலாம். கட்டண விலக்கு பெற விரும்பும் மாணவர், கலந்தாய்வின்போது, அசல் ஜாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

இது தொடர்பான அரசாணையை, www.tn.gov.in மற்றும் www.tnteu.in இணைய தளங்களில் பதவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஆசிரியர் கல்வி பட்டய தேர்வு மறுகூட்டல் முடிவு வெளியீடு

ஆசிரியர் கல்வி பட்டய தேர்வு, மறுகூட்டல் முடிவுகளை, தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது. தேர்வுத்துறை அறிவிப்பு: சமீபத்தில், ஆசிரியர் கல்வி முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு பட்டய தேர்வுகள் நடந்தன. தேர்வு முடிவிற்குப் பின், பல மாணவர், மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தனர். இதில், மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களின் பட்டியல், அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்களுக்கு, அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள், சம்பந்தபட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்குச் சென்று, மதிப்பெண் விவரங்களை அறிந்து கொள்ளலாம். இவ்வாறு தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.

பிளஸ்-2 வகுப்புகளில் ஒரு பிரிவுக்கு 50 மாணவர்கள் மட்டுமே! கல்வித்துறை உத்தரவு

பிளஸ்-2 வகுப்புகளில் ஒரு பிரிவுக்கு 50 மாணவர்களுக்கு மேல் இருக்கக்கூடாது என்று மெட்ரிக் பள்ளிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கல்வி உரிமைச் சட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, மெட்ரிக் பள்ளிகளில் ஒரு வகுப்புக்கு 4 பிரிவுகள் இருக்க வேண்டும். 5வது பிரிவை வைக்க வேண்டுமானால் அனுமதி வாங்க வேண்டும். அதற்கு மேல் எக்காரணம் கொண்டும் பிரிவுகள் கூடுதலாக இருக்கக்கூடாது என கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இது தொடர்பாக பள்ளிகளில் ஆய்வு நடத்தி இந்த உத்தரவை அமல்படுத்தி வருகிறார்கள். தமிழகத்திலுள்ள பல பள்ளிகள், இதனை ஏற்று அதிகமாக இருந்த பிரிவுகளை குறைத்து விட்டனர். ஆனால், குறைத்த பிரிவுகளில் படித்த மாணவர்களை, மற்ற பிரிவுகளில் சேர்த்து கல்வி கற்று கொடுத்து வருகின்றனர். ஆனால் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, ஆசிரியர்களுக்கு பெரும் மன அழுத்தத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே, ஒரு பிரிவில் 50 மாணவர்களுக்கு மேல் இருக்கக்கூடாது என்ற விதியையும் தற்போது அமல்படுத்தி உள்ளனர். கல்வி உரிமைச் சட்டப்படி, தொடக்கப்பள்ளிகளில் ஒரு வகுப்புக்கு ஒரு பிரிவில் 30 மாணவர்களும், நடுநிலைப்பள்ளிகளில் ஒரு வகுப்புக்கு ஒரு பிரிவுக்கு 35 மாணவர்களையும் வைத்துக் கொள்ளலாம். பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகள் கல்வி உரிமைச் சட்டத்தில் வராது.

இருந்தாலும்கூட ஏற்கனவே ஒரு பிரிவுக்கு 50 மாணவர்களுக்கு மேல் இருக்கக் கூடாது என்ற விதிமுறை இருந்தது. அதனை தற்போது கல்வித்துறை அதிகாரிகள் நடைமுறைப்படுத்த தொடங்கியுள்ளனர். பல பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்புக்கும் 10 பிரிவுகள் வரை வைத்து நடத்தினர். தற்போது பிரிவுகள் குறைக்கப்பட்டதால், அதிகமான மாணவர்களை சிறிய இடத்தில் அடைத்து வைத்து பாடம் கற்று கொடுக்கின்றனர். இதனால், பாதுகாப்பு மற்றும் நிர்வாகப் பிரச்னை ஏற்படுகின்றன. ஆசிரியர்களால் ஒவ்வொரு மாணவனையும் தனித்தனியாக கவனிக்க முடியாத சூழ்நிலை உருவாகிறது. இதனைத் தடுக்கவே, ஒரு பிரிவிற்கு 50 மாணவர்கள் என்ற கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பெட்ரோல் விலை ரூ. 2 உயர்வு: இன்று நள்ளிரவு முதல் அமல்

ி: நாட்டில் பெட்ரோல் விலை இன்று நள்ளிரவு முதல் லிட்டருக்கு ரூ. 1.82 உயர்த்தப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து வருவதையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் (CPS) இணைய வழியில் விவரங்களை தொகுக்க / பராமரிக்க 03.07.2013 அன்று அனைத்து மாவட்டங்களுக்கும் காஞ்சிபுரம், திருச்சி மற்றும் மதுரையில் மண்டலங்களில் ஆய்வுக்கூட்டம் நடைபெறுகிறது

Thursday, June 27, 2013

வாக்காளர் பட்டியலில் திருத்தம்: இன்டர்நெட் மையங்கள் விண்ணப்பிக்கலாம்

  இணையதளம் மூலம் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளும் பணிகளைச் செய்ய விரும்பும் இன்டர்நெட் மையங்கள், அதற்கான அங்கீகாரம் பெற மாநகராட்சியை அணுகுமாறு மாவட்ட தேர்தல் அலுவலரும் மாநகராட்சி ஆணையருமான விக்ரம் கபூர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்தி: இணையதளம் மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் மேற்கொள்ளும் பணிகளை அங்கீகரிக்கப்பட்ட இன்டர்நெட் மையங்கள் வாயிலாக மேற்கொள்ளலாம் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

அந்தப் பணிகளைச் செய்ய விரும்பும் சென்னையைச் சேர்ந்த இன்டர்நெட் மையங்கள் மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட தேர்தல் அலுவலகம், 11/4, சாமி சாலை, சென்னை - 600 003 என்ற முகவரியை அணுகலாம். சென்னை மாநகராட்சி மண்டல அலுவலர்களையும் அங்கீகாரம் பெற அணுகலாம் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரூப்-4 தேர்வு அறிவிப்பு வெளியீடு

தமிழக அரசின் பல்வேறு காலி பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப்-4 தேர்வு அறிவிப்பு டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. காலியாக உள்ள ஜூனியர் அசிஸ்டென்ட், பில் கலெக்டர், டைப்பிஸ்ட், ஸ்டெனோ, பீல்டு சர்வேயர் உள்ளிட்ட பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்காக குரூப்-4 தேர்வு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் 18 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிக்க ஏற்ற கல்வித்தகுதி, இதர தேவைகள் விண்ணப்பிக்கும் பதவிக்கு ஏற்ப மாறுபடும்.

ஜூலை 15 ஆன்லைனில் பதிவு செய்ய கடைசி நாளாகும். ஜூலை 17 க்குள் கட்டணம் செலுத்த வேண்டும். எழுத்துத்தேர்வு ஆகஸ்ட் 25ம் தேதி நடைபெறுகிறது. விண்ணபிப்பவர் www.tnpscexams.net என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

DEEO Tirupur seek free bus pass details

Wednesday, June 26, 2013

தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் , பள்ளியில் சாதி குறிப்பிடத்தேவையில்லை என்ற அரசாணை பின்பற்றுதல் சார்பு

மாணவர் சேர்க்கைக்கு தகுதி வாய்ந்த டி.டி.ஐ., பள்ளிகள் பட்டியல் வெளியீடு

நடப்பு கல்வி ஆண்டில், மாணவ, மாணவியர் சேர்க்கைக்கு தகுதி வாய்ந்த ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளின் பட்டியலை, ஆசிரியர் பயிற்சி இயக்குனரகம் வெளியிட்டு உள்ளது. மாநிலம் முழுவதும், 560 ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் (டீச்சர் டிரெய்னிங் இன்ஸ்டிடியூட்) உள்ளன. இவற்றில், பல பள்ளிகள், மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டில், ஆசிரியர் பயிற்சிப் படிப்பில் சேர, 4,500 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
ஜூலை முதல் வாரத்தில், "ஆன்-லைன்' வழியாக, மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இந்நிலையில், மாணவர் சேர்க்கைக்கு, தகுதி வாய்ந்த ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் எவை என்ற விவரங்களை, ஆசிரியர் பயிற்சி இயக்குனரகம், தன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. www.tnscert.org என்ற இணைய தளத்தில், ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு பள்ளியின் முகவரி, சம்பந்தப்பட்ட பள்ளிக்கு, அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களின் எண்ணிக்கை உள்ளிட்ட பல விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. இது, ஆசிரியர் பயிற்சிப் படிப்பில் சேர முடிவு செய்துள்ள மாணவருக்கு, பெரிதும் உதவியாக இருக்கும்.