அடுத்த ஆண்டு முதல், தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு, 'ஆன்லைன்' முறையில் அங்கீகாரம் வழங்கப்பட உள்ளது; விதிகளை மீறும் பள்ளிகளுக்கு, அங்கீகாரம் கிடைக்காது. தமிழகத்தில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் நர்சரி, மெட்ரிக் பள்ளிகள் செயல்படுகின்றன. அவற்றில், நர்சரி பள்ளிகளுக்கு, தொடக்க கல்வி இயக்குனரகமும், மெட்ரிக் பள்ளிகளுக்கு, மெட்ரிக் இயக்குனரகமும் அங்கீகாரம் வழங்குகின்றன.
இந்த அங்கீகாரத்துக்கு, தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இருந்து, சான்றிதழ்கள் பெற வேண்டும். கும்பகோணம் பள்ளி தீ விபத்துக்கு பின் அமலுக்கு வந்த, சிட்டிபாபு கமிட்டியின் பரிந்துரைகளையும் பின்பற்ற வேண்டும். இந்நிலையில், அங்கீகார விதிகள் மற்றும் நடைமுறை குழப்பங்களை தீர்க்க, வரும் கல்வி ஆண்டு முதல், 'ஆன்லைன்' அங்கீகார முறை அமலுக்கு வருகிறது. சி.பி.எஸ்.இ.,யை போல், ஆன்லைனில் ஆவணங்களை பரிசீலித்து, அங்கீகாரம் வழங்கப்பட உள்ளது.
இந்த முறையில், தொழில்நுட்ப ரீதியாக, 'சாப்ட்வேர்' கேட்கும் ஆவணங்களை வழங்கிய பின், பள்ளிகள் பதிவு செய்ய முடியும். அதனால், விதிமீறிய பள்ளிகள், மீண்டும் அங்கீகாரம் பெற முடியாது என, பள்ளிக்கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
No comments:
Post a Comment