இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, December 01, 2017

கல்விக்கு தொடர்பில்லாத நிகழ்ச்சிகளை நடத்த தடை ஐகோர்ட்டு உத்தரவு


திருப்பூரில் உள்ள சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் டிசம்பர் 2-ந் தேதி (இன்று) முதல் 45 நாட்களுக்கு, தமிழக அரசின் சாதனை விளக்கப் பொருட்காட்சி நடைபெற உள்ளது. இதற்காக இந்த கல்லூரி மைதானத்தில் பொருட்காட்சி திடல் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. இந்த கல்லூரி மைதானத்தில், பொருட்காட்சி நடத்துவதற்கு தடை கேட்டு, ஐகோர்ட்டில் அந்த கல்லூரியில் எம்.காம். படிக்கும் மாணவர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி, ‘பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்கள், கல்விக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். கல்வி தொடர்பான விழா மட்டுமே அங்கு நடைபெறவேண்டும். கல்விக்கு சம்பந்தம் இல்லாத நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது. அதனால், அரசு நடத்தும் இந்த பொருட்காட்சிக்கு தடை விதிக்க போகிறேன்’ என்று கருத்து தெரிவித்தார். அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ‘அரசின் சாதனை விளக்க பொருட்காட்சி இந்த கல்லூரி மைதானத்தில் நடத்தினாலும், இதனால் மாணவர்களின் கல்விக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை தான் இந்த பொருட்காட்சி நடைபெறும். பகல் நேரத்தில் எதுவும் நடைபெறாது. பெரும் தொகை செலவு செய்து எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டது.

மனுதாரர் கடைசி நேரத்தில் இந்த ஐகோர்ட்டை நாடியுள்ளார்’ என்று வாதிட்டார். இதையடுத்து நீதிபதி, ‘பெரும் தொகை செலவு செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்படுவதால், இந்த ஒரு முறை மட்டும், கல்லூரி மைதானத்தில் பொருட் காட்சி நடத்த அரசுக்கு அனுமதி வழங்குகிறேன். அதேநேரம், கல்லூரி மைதானத்தில் நடைபெறும் அரசு சாதனை விளக்க பொருட்காட்சியினால், மாணவர்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது. மாலை 6 மணிக்கு முன்பாக ஒலிபெருக்கி எதுவும் பயன்படுத்தக்கூடாது. பொருட்காட்சிக்கு வரும் பொதுமக்களுக்கு தனி பாதை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். இனி பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளில் கல்விக்கு சம்பந்தம் இல்லாத இதுபோன்ற பொது நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது. இதுபோன்ற நிகழ்ச்சிகளை கல்வி நிலையங்களில் நடத்த தடை விதிக்கிறேன்’ என்று நீதிபதி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment