பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் இறுதிப் பட்டியல் தயாரிக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் 8 லட்சத்து 91 ஆயிரம் பேர் தேர்வு எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிளஸ் 2 தேர்வு மார்ச் 7ம் தேதி தொடங்க உள்ளது.
இதையடுத்து மாவட்ட வாரியாக அனைத்து வகை பள்ளிகளிலும் பிளஸ் 2 பயிலும் மாணவ, மாணவியர் குறித்த விவரங்கள் தயாரிக்கும் பணி கடந்த மாதம் தொடங்கியது. முதற்கட்டமாக மாணவர்கள் பெயர், பிறந்த தேதி, தந்தை பெயர், பள்ளி அமைந்த இடம் உள்ளிட்ட விவரங்களை தயார் செய்து, தேர்வுத்துறைக்கு அனுப்பி வைத்தனர். அதில் உள்ள குறைகள் திருத்தும் பணிகள் முடிந்து திரும்ப மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தற்போது இரண்டாம்கட்ட பணி நடந்தது. அதில் உயிரியல் பாடப் பிரிவில் 3 லட்சத்து 38 ஆயிரம் பேரும், கணினி அறிவியல் பிரிவில் 2 லட்சத்து 58 ஆயிரம் பேரும், கலைப் பிரிவில் 2 லட்சத்து 95 ஆயிரம் பேரும் பிளஸ் 2 தேர்வு எழுத உள்ளதாக தெரிய வருகிறது. இந்த பட்டியல் மீண்டும் திருத்தம் செய்வதற்காக மாவட்டங்களுக்கு இந்த வாரம் அனுப்பி வைக்கப்பட உள்ளது. டிசம்பர் மாத கடைசியில் இறுதி வடிவம் பெறும். அதற்கு பிறகு ஹால்டிக்கெட் தயாரிக்கும் பணி ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கும். பிப்ரவரி மாதத்தில் செய்முறைத் தேர்வு நடப்பதால், ஜனவரி 30ம் தேதிக்கு பிறகு ஹால்டிக்கெட் வழங்கப்பட உள்ளது. தனித் தேர்வர் பட்டியல் ஜனவரியில் வெளியிடப்படும்.
No comments:
Post a Comment