50வது புயல் சின்னம் சாகர்
கன்னியாகுமரி மாவட்டத்தை புரட்டிப் போட்டுள்ள புயலுக்கு 'ஒக்கி' எனப் பெயரிடப்பட்ட நிலையில், இதற்கு அடுத்து உருவாக உள்ள புயல் சின்னத்துக்கு 'சாகர்' என பெயரிடப்பட்டுள்ளது. இது புயல்களின் பெயர் வரிசையில் இடம்பெறும் 50 - ஆவது பெயராகும்.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. இந்த நிலையில், தென்மேற்கு வங்க கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாறியது. அது மேலும் வலுப்பெற்று புயல் சின்னமாக மாறி, கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புயலுக்கு 'ஒக்கி' என பெயரிடப்பட்டது. இந்த பெயரை வங்கதேசம் வழங்கியுள்ளது. வங்காள மொழியில் 'ஒக்கி' என்றால் 'கண்' என்று அர்த்தம். இந்த ஒக்கி புயல்களின் பெயர் வரிசையில் ஒக்கி 49 -ஆவது பெயராகும். இதையடுத்து உருவாகும் 50 -ஆவது புயலுக்கு 'சாகர்' என இந்தியா பெயர் வழங்கியுள்ளது. ஹிந்தி மொழியில் சாகர் என்றால் கடல் என்று அர்த்தம்.
பெயர் சூட்டப்படுவது எப்படி?: உலக அளவில் வானிலை முன்னறிவிப்பாளர்கள், பொதுமக்கள், வானிலை கண்காணிப்பாளர்களின் தொடர்பு வசதிக்காகவும், எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிடுவதற்கு உதவியாகவும் புயலுக்கு பெயர் வைக்கும் முறை நடைமுறைக்கு வந்தது.
கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் முறையை முதன்முதலில் ஆஸ்திரேலிய நாட்டவர்தான் உருவாக்கினர். 1950 -ஆம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்காவும் புயல்களுக்கு பெயர் வைக்கத் தொடங்கியது.
கடலில் உருவாகும் புயல்களுக்கு, அந்தந்த கண்டங்களைச் சேர்ந்த நாடுகள் ஒன்றிணைந்து பெயர்களை வைக்கும் முறை ஏற்படுத்தப்பட்டது. அந்த வகையில் வங்கக் கடல் மற்றும் அரபிக் கடலில் உருவாகும் புயல்களுக்கு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், மாலத்தீவு, மியான்மர், ஓமன், தாய்லாந்து ஆகிய 8 நாடுகள் இணைந்து பெயர் வைக்கின்றனர்.
அவ்வகையில், 2004 -இல் இந்த நாடுகள் இணைந்து 64 பெயர்களைத் தேர்வு செய்தன. இந்நாடுகளில் உருவாகும் புயல்களுக்கு பட்டியலின்படி, சுழற்சி முறையில் பெயர் வைக்கப்படுகின்றன
No comments:
Post a Comment