தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இந்த மாதம் சம்பளம் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதில் பல காரணங்கள் கூறப்பட்டாலும் நிதிநெருக்கடி முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது.
தமிழகத்தில் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணியாற்றிவருகின்றனர். அவர்களுக்கு நவம்பர் மாதத்திலிருந்து ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதனால், புதிய ஊதியத்தை எதிர்பார்த்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் காத்திருந்தனர். ஆனால், வழக்கம்போல 1-ம் தேதிக்குள் சம்பளம் பட்டுவாடா செய்யப்படும் நிலையில் ஏனோ இந்த மாதம் புதிய சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால், அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பம் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது.
மாதச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் அரசு ஊழியர்கள் சிரமப்படுகின்றனர். சம்பளம் தாமதம் குறித்து அரசு ஊழியர்கள் கூறுகையில், அரசு ஊழியர்களின் சர்வீஸ் ரெக்கார்டை டிஜிட்டல் மயமாக்கும் பணி, புதிய ஊதிய உயர்வு கணக்கெடுப்பு ஆகியவற்றால் சம்பளம் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் 20-ம் தேதிக்கு முன்பு கருவூலங்களுக்குச் சென்ற சம்பளப் பட்டியலுக்கு மட்டும் பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள அரசு ஊழியர்களுக்கான சம்பளப் பில் ஓகே ஆனாலும், பின்தேதி குறிப்பிட்டு பணம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், நவம்பர் மாத சம்பளம் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும், சம்பளப் பில் தாமதப்படுத்துவதற்கு நிதிநெருக்கடியும் காரணமாக உள்ளது" என்றனர்.
No comments:
Post a Comment