பணி நிரந்தரம் கோரி, அரசு பள்ளி பகுதி நேர ஆசிரியர்கள் இன்று போராட்டம் அறிவித்துஉள்ளனர். அனுமதியின்றி போராட்டம் நடத்துவோர் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழக அரசு பள்ளிகளில், ஓவியம், தையல், இசை, வேளாண்மை போன்ற சிறப்பு பாடங்களை நடத்த, 2012ல், 16 ஆயிரத்து, 549 பகுதி நேர ஆசிரியர்கள் நிய மிக்கப்பட்டனர். இவர்களில், 12 ஆயிரத்து, 637 பேர் மட்டுமே, தற்போது பணியாற்றுகின்றனர். இவர்கள் வாரந்தோறும், மூன்று அரை நாட்கள் என, மாதத்தில் ஆறு நாட்கள் வகுப்பு எடுக்கின்றனர்; 7,700 ரூபாய் மாத ஊதியம் தரப்படுகிறது.இந்நிலையில், பணி நிரந்தரம் கோரி, சென்னை, வள்ளுவர் கோட்டம் முன், பகுதிநேர ஆசிரியர்கள் சங்கத்தினர், இன்று மறியல் போராட்டம் நடத்த உள்ளனர். பள்ளி வேலை நாளில், அனுமதியின்றி போராட்டம் நடத்தும் ஆசிரியர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Tuesday, December 26, 2017
பகுதி நேர ஆசிரியர்களுக்கு கல்வித்துறை எச்சரிக்கை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment