அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், காலிப்பணியிட விபரங்களை, இணையதளத்தில் பதிவேற்றுவதற்கான அவகாசம், நாளை (29ம் தேதி) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.பள்ளிக்கல்வித்துறை சார்பில், ஆசிரியர்களுக்கான பொது கலந்தாய்வு, ஆண்டுதோறும் மே மாதம் நடக்கிறது.
நடப்பாண்டில், தொடக்க கல்வித்துறையும் இக்கலந்தாய்வை, ஆன்-லைன் மூலம் நடத்தியது.மாவட்ட வாரியாக, காலிப்பணியிட விபரங்கள் பெற்று, கலந்தாய்வு நடக்கும் முன், இணையதளத்தில் பதிவேற்றுவது வழக்கம். இதற்கு பதிலாக, காலிப்பணியிட விபரங்களை, அந்தந்த பள்ளிகளில் இருந்து திரட்டும் வகையில், இயக்குனர் இளங்கோவன், புதிய உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதன்படி, அனைத்து அரசு, நகராட்சி, மாநகராட்சி பள்ளிகளிலும், தற்போது பணியில் உள்ள ஆசிரியர்கள், காலிப்பணியிட விபரங்களை, தலைமையாசிரியர்களே இணையதளத்தில், பதிவேற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான படிவங்கள், தலைமையாசிரியர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன.ஆசிரியர்களால் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, www.tndse.com என்ற இணையதளத்தில் கடந்த, 26ம் தேதி வரை, பதிவேற்ற உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், தற்போது மீண்டும், கால அவகாசம் நாளை (டிச., 29ம் தேதி) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.பள்ளிகளுக்கு அளிக்கப்பட்ட பயனர் எண், பாஸ்வேர்டு கொண்டு, எவ்வித பிழையும் இல்லாமல், துல்லியமாக தகவல்களை உள்ளீடு செய்ய, தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment