முதியோர் வன்கொடுமை தடுப்பு தினத்தை முன்னிட்டு, தமிழகப் பள்ளிகளில் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்ககங்களுக்கு துறைச் செயலர் டி.உதயச்சந்திரன் கடிதம் எழுதியுள்ளார். ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 15-ஆம் தேதி, சர்வதேச முதியோர் வன்கொடுமை தடுப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இதையொட்டி, முதியோருக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமைகளைத் தடுப்பது குறித்த உறுதிமொழியை டாக்டர் வி.எஸ்.நடராஜன் முதியோர் சிகிச்சை அறக்கட்டளை உருவாக்கியுள்ளது. ஜூன் 15-ஆம் தேதி அனைத்துப் பள்ளி மாணவர்களும் இந்த உறுதிமொழியை பள்ளி பிரார்த்தனைக் கூட்டத்தில் எடுத்துக் கொள்ள அறிவுறுத்தும்படி, பள்ளிக் கல்வித் துறை செயலர் உதயச்சந்திரனுக்கு அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் டாக்டர் வி.எஸ்.நடராஜன் கடிதம் எழுதினார்.
இதையடுத்து, குறிப்பிட்ட தினத்தில் பள்ளி மாணவர்கள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வை நடத்தும்படி தொடக்கக் கல்வி இயக்ககம், பள்ளிக் கல்வி இயக்ககம், மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்ககம் ஆகியவற்றுக்கு துறைச் செயலர் உதயச்சந்திரன் கடிதம் மூலம் அறிவுறுத்தியுள்ளார் என்று டாக்டர் வி.எஸ். நடராஜன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment