அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் தினமும் பள்ளி தொடங்கும் போது நடத்தப்படும் காலை வழிபாட்டின் செயல் முறைகள் குறித்த அட்டவணையை தொடக்கக்கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ளது.
திங்கட்கிழமைகளில் தமிழ்த்தாய் வாழ்த்து, கொடியேற்றம், கொடி வணக்கம், கொடிப்பாடல், உறுதிமொழி, திருக்குறள் வாசித்து, அதற்கான விளக்கத்தை மாணவர்கள் ஒவ்வொரு நாளும் சுழற்சிமுறையில் கூற வாய்ப்பளிக்க வேண்டும்.
தினமும் மாணவர்களால் சுழற்சி முறையில் அன்றாடச் செய்தியை நாளிதழ்களைக் கொண்டு வாசிக்கச் செய்வது, பொது அறிவுத் தகவல் மற்றும் பழமொழிகளை விளக்கங்களுடன் கூறவைப்பது, குறிப்பாக அன்றைய தேதியில் பிறந்தநாள் கொண்டாடும் மாணவ,மாணவியருக்கு தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பது, பள்ளி நடைமுறை குறித்த ஆசிரியர் கருத்து, இறுதியாக நாட்டுப்பண்ணுடன் காலைவழிபாடு 17நிமிடங்கள் நடைபெறவும், இதர நாட்கள் 10 நிமிடங்கள் வழிபாடு நடைபெறவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment