தமிழகத்தில் நீட் தேர்வு தீர்ப்புக்கு பின்னரே மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியாகும் என்று மருத்துவ கல்வி இயக்குனர் கூறினார். நாகர்கோவிலில் மருத்துவ கல்வி இயக்குநர் டாக்டர் எட்வின் ஜோ நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் இந்த ஆண்டு 350 மருத்துவ மேற்படிப்பு இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 10 இடங்கள் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மருத்துவ துறையில் காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. புதிய பணியிடங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.
பொதுவாக 100 சீட்டுகளுடன் மட்டுமே மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட்டு வந்தன. ஆனால் சமீபத்தில் புதுக்கோட்டையில் 150 மாணவர்கள் சேர்க்கை அனுமதியுடன் கூடிய மருத்துவக்கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. இது போல ராமநாதபுரம், விருதுநகர், கரூர் மாவட்டங்களிலும் 150 மாணவர்கள் சேர்க்கையை அடிப்படையாக கொண்டு தொடங்கப்படும். கொள்கை அளவில் நீட் தேர்வுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளன. இந்த தீர்ப்புக்கு பின்னரே மாணவர்கள் சேர்க்கைக்கான அறிவிப்புகள் வெளியாகும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment