அண்ணா பல்கலைக்கழகம் அதன்கீழ் செயல்படும் கல்லூரிகளில் பி.ஆர்க் படிப்புக்கு இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தல் நேற்று தொடங்கியது. ஒருங்கிணைந்த 5 ஆண்டு பி.ஆர்க் படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் https://barch.tnea.ac.in என்ற இணையதளத்தில் ஜூலை 6ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
அதற்காக உபயேகத்தில் உள்ள ஒரு இ-மெயில் முகவரி, செல்போன் எண் பதிவு செய்ய வேண்டும். மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்புகள் அந்த இ-மெயில் முகவரி, தொலைபேசி எண்ணுக்கும் அனுப்பப்படும். எஸ்சி/எஸ்சிஏ/எஸ்டி பிரிவினர் ரூ.250ம், பிற பிரிவினர் ரூ.500ம் விண்ணப்ப கட்டணமாக இணையதளம் மூலமாகவே செலுத்த வேண்டும். மாநில அரசின் இடஒதுக்கீடு சலுகை கோருவோர் விண்ணப்ப கட்டணத்துடன் ரூ.100 செலுத்த வேண்டும். பி.ஆர்க் படிப்புக்கு விளையாட்டு வீரர்கள் பிரிவின்கீழ் விண்ணப்பிக்க விரும்புவோர் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு நேரில் வந்து விண்ணப்பித்தால் மட்டுமே அவர்களின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும். விண்ணப்பித்தலின்போது மாணவர்கள் இருப்பிட சான்று, முதல் பட்டதாரிக்கான சலுகைக்காக கோருபவர் என்றால் அதற்கான சான்றிதழை தயாராக வைத்திருக்க வேண்டும்.
முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள் பிரிவின்கீழ் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பவர்கள் அதற்காக விண்ணப்பத்தை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அண்ணா பல்கலைகழகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
No comments:
Post a Comment