உயர்கல்வி பெற நாடு முழுவதும் புதிய தேர்வுகள் அமைப்பு!
உயர்கல்வி பெற நாடு முழுவதும் புதிய தேர்வுகள் அமைப்பு!
இந்திய அளவிலான உயர்கல்வி பெறுவதற்கான தகுதித் தேர்வுகளை, சிபிஎஸ்இ அமைப்பு நடத்தி வருகிறது. இந்நிலையில் இந்தாண்டு முதல் (2017) திடீரென மருத்துவப்படிப்புக்கு அனைத்து மாநிலத்தவர்களும் ‘நீட்’ எனப்படும் தகுதித்தேர்வு எழுத வேண்டும் எனும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், இதுபோன்ற உயர்கல்விக்கான தேர்வுகளை தேசிய அளவில் நடத்திவரும் சிபிஎஸ்இ தேர்வு அமைப்புக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டிருக்கிறது.
மேலும், சமீபத்தில் நீட் தேர்வில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு விதமான கேள்வித்தாள்கள் தயார் செய்யப்பட்டு தேர்வு நடந்தது. இது மாணவர்கள் மத்தியில் கடும் சர்ச்சைக்குள்ளாகியது.
இந்நிலையில் இதுபோன்ற சிக்கலில் இருந்து சிபிஎஸ்இ அமைப்பை விடுவிக்கவும், அனைவருக்கும் பொதுவான தேர்வு நடைமுறையை அமல்படுத்தவும் புதிய வரைவு மசோதா தயாரிக்கப்பட்டு மத்திய நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டது.
ஆக, இந்த மசோதாவில் கூறியுள்ளதுபடி, புதிய தேர்வுகள் அமைப்பை உருவாக்க மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் ஒப்புக்கொண்டுள்ளது. எனவே, இனிமேல் நடக்கவிருக்கும் உயர்கல்விக்கான தகுதித் தேர்வுகளை நடத்த புதிதாகத் தொடங்கவிருக்கும் தேர்வுகள் அமைப்பு உதவும். இதன்மூலம் உயர்கல்வி பெற நாடு முழுவதும் ஒரே தேர்வுகள் அமைப்பு உருவாகிறது.
No comments:
Post a Comment