இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, June 15, 2017

தொடக்க கல்விக்கு புதிதாக 30 பள்ளிகள்‘கனவு ஆசிரியர்’ விருது அறிவிப்பு


பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பிறகு அமைச்சர் செங்கோட்டையன் நேற்று ெவளியிட்ட அறிவிப்புகள்: * மக்கள் தொகை அதிகம் உள்ள இடங்களில் 30 புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்படும்.

* அனைத்து வகையிலும் புதுமையான விதத்தில் சிறப்பாக செயல்படும் பள்ளிகளுக்கு ‘‘புதுமைப் பள்ளி விருது’’ வழங்கப்படும். இதற்காக ரூ.1கோடியே 92 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

* செயல் வழிக் கற்றலுக்காக புதிய அட்டைகள் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்கப்படும். அதற்காக ரூ.31 கோடியே 82 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
* 6,7,8 ம்வகுப்பு மாணவ மாணவியர் பயன்பெறும் வகையில் நடுநிலைப் பள்ளிகளில் 3 கணினிகள் கொண்ட கணினி வழிக்கற்றல் மையங்கள் அமைக்கப்படும். இதற்காக ₹6 கோடியே 71 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
* 5639 அரசு உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளுக்கு நாப்கின் வழங்கும் இயந்திரம் மற்றும் எரியூட்டு இயந்திரம் வழங்கப்படும். அதற்காக ரூ.22 கோடியே 56 லட்சம் செலவிடப்படும்.
* 31322 அரசு மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் நாளிதழ், சிறுவர் இதழ்கள் வாங்க ரூ.4 கோடியே 83 லட்சம் செலவிடப்படும்.
* நடப்பு கல்வி ஆண்டில் 3336 முதுநிலைபட்டதாரி ஆசிரியர் மற்றும் 748 கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்.
* சிறந்த முறையில் கணினியை பயன்படுத்தி மாணவர்களுக்கு கற்பித்தல், பள்ளி மேலாண்மையில் சிறந்து விளங்குதல், குழந்தைகள் சேர்க்கையில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களை தேர்வு செய்து ஒவ்வொருவருக்கும் கனவு ஆசிரியர் விருது மற்றும் ரூ.10 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்கப்படும். இதற்காக ரூ.19 லட்சத்து 20 ஆயிரம் செலவிப்படும்.
* பள்ளிக் கல்வித்துறையில் உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் நிரந்தரம் மற்றும் தற்காலிகம் என பராமரிக்கப்பட்டு வருகின்றன. அதில் 17 ஆயிரம் தற்காலிகப் பணியிடங்கள் நிரந்தரப் பணியிடங்களாக(பணியிடங்கள் மட்டும். ஊழியர்கள் அல்ல) மாற்றப்படும்.
* 1 முதல் 5ம் வகுப்பு வரை உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் கற்றல் கற்பித்தல் துணைக் கருவிகள் வழங்கப்படும். ரூ.39 கோடியே 25 லட்சம் செலவிடப்படும்.
* 7219 நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் 3 லட்சத்து 75 ஆயிரம் மாணவ மாணவியருக்கு திறனறித் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். ரூ.2 கோடியே 93 லட்சம் செலவிடப்படும்.
* அறிவியல், தொழில் நுட்பம், கலை இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் தனித் திறமை உள்ள மாணவர்கள் மேலை நாடுகளுக்கு கல்விப் பயணம் செய்யும் வகையில் ஆண்டுக்கு 100 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்படும். ₹3 கோடி செலவிடப்படும்.
* கலை, இலக்கியம் உள்ளிட்ட 150 வகைப் பிரிவுகளில் மாபெரும் மாணவர் கலைத் திருவிழா அறிமுகம் செய்யப்படும். ரூ.4 கோடி இதற்கு செலவிடப்படும்.
* தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஒன்றியம் தோறும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் கல்விக் கடன் முகாம்கள் நடத்தப்படும்.
* ஒவ்வொரு ஒன்றியத்திலும் போட்டித் தேர்வுக்கான ஒரு பயிற்சி மையம் அமைக்கப்படும். இதற்கு ரூ.20 கோடி செலவிடப்படும். உயர்நிலை, மேனிலைப்பள்ளிகளில் போட்டித் தேர்வுக்கான வழி்காட்டி மையங்கள் அமைக்கப்படும். ரூ.2 கோடி செலவிடப்படும்.
* பள்ளிக் கல்வித்துறைக்காக தனியாக கற்றல் கற்பித்தல் மேலாண்மைத் தளம் ஒன்று உருவாக்கப்படும். அதன் மூலம் காணொளி, கணினி வழித் தேர்வுகள், செல்போன் செயலிகள் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும். ரூ.2 கோடி செலவிடப்படும்.
* அரசு பொது நூலகத்துறை நூலகங்களுக்கு புத்தகம் வாங்க ரூ.25 கோடி, அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்கு புத்தகம் வாங்க ₹5 கோடி ஒதுக்கப்படும். 32 மாவட்ட தலை நகரங்களில் புத்தக கண்காட்சி நடத்தப்படும். மதுரையில் உலக தமிழச் சங்க வளாகத்தில் ஒரு லட்சம் புத்தகம் கொண்ட மாபெரும் நூலகம் ரூ.6 கோடி செலவில் ஏற்படுத்தப்படும்.
* 24 மாவட்ட மைய நூலகங்களில் போட்டித் தேர்வு பயிற்சி மையங்கள் அமைக்கப்படும். ரூ.75 லட்சம் செலவிடப்படும். 314 முழுநேர கிளை நூலகங்களில் 123 நூலகங்களில் கணினி வசதி ஏற்படுத்த ரூ.1 கோடியே 84 லட்சம் செலவிடப்படும். மின் நூலகம் ₹2 கோடி செலவில் அமைக்கப்படும்.
* மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் நிர்வாக மேம்பாட்டுக்காக கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஆய்வாளர் அலுவலகங்கள் ரூ.32 லட்சத்து 85 ஆயிரம் செலவில் ஏற்படுத்தப்படும்.
* 3 மற்றும் 5ம் வகுப்புகளில் சமநிலைக் கல்வி அளிக்கப்படும் இதற்கு ரூ.13 கோடியே 94 லட்சம் செலவிடப்படும்.

No comments:

Post a Comment