அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியிலே சேர்க்க வேண்டும் என்பதை கட்டாயமாக்காதது ஏனென்று அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தஞ்சை மாவட்டம், பந்தநல்லூரில் உள்ள அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்க அனுமதி மறுத்து அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கடந்தாண்டு ஜூன் 14 }ஆம் தேதி அரசு வெளியிட்ட உத்தரவில், அரசு பள்ளிகளில் மட்டுமே ஆங்கில வழி வகுப்புகள் தொடங்க அனுமதி என்று குறிப்பிட்டுள்ளது.
அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழி பாடத்தைத் தொடங்க மறுப்பது பாரபட்சமானது. அரசு பள்ளிகளில் தொடங்கப்பட்ட ஆங்கில வழி வகுப்புகளை, தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுடன் ஒன்றாக அமரவைத்து, தமிழ் பாடம் நடத்தும் ஆசிரியர்களே நடத்துகின்றனர் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி என். கிருபாகரன் பிறப்பித்த உத்தரவு:
கிராமப்புறங்களை விட நகர்ப்புறங்கள் மட்டும் ஏன் முன்னேறுகின்றன?
கிராமப்புறங்களில் தரமான கல்வியின்மையே இதற்கு முக்கிய காரணமாகும். இந்தியா கிராமங்களால் வாழ்கிறது. ஆனால், கல்வியில் கிராமப்புற மாணவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். இதன் காரணமாகத்தான் கிராமப்புறங்களில் உள்ள பெற்úôரும் தங்களது குழந்தைகளை நகர்ப்புறங்களில் உள்ள தனியார் பள்ளிகளில் கல்வி பயில்வதற்கு அனுப்புகின்றனர். தமிழ் வழி ஆசிரியர்களே ஆங்கில வழி பாடத்தை நடத்துவதால், ஆங்கில வழி வகுப்புகளுக்கு அனுமதி வழங்கியதில் எந்தவித பயனும் இல்லை. பெரும்பாலான ஆசிரியர்கள் தங்களது பணிக்கு சரியான நேரத்தில் வருவதில்லை. ஏனெனில் அவர்கள் வெளியில் உள்ள வியாபாரரீதியான பணிகளில் கவனம் செலுத்துவதால் தான். இவ்வாறு தொடர்ந்தால், கிராமப்புற மாணவர்களை கடவுளால் கூட காப்பாற்ற முடியாது.
ஆசிரியர்களின் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்ப்பதை கட்டாயமாக்காதது ஏன்"?: மேலும், அரசு பள்ளி ஆசிரியர்கள் குறித்த நேரத்தில் பள்ளிகளை திறக்காதது, முறையாக வகுப்புகளை நடத்தாதது, ஆசிரியர் பணி அல்லாமல் பகுதி நேர தொழில் செய்வது போன்ற நடவடிக்கைகளில் அரசு பள்ளி ஆசிரியர்கள் ஈடுபடுவது வேதனை அளிப்பதாக தெரிவித்த நீதிபதி என்.கிருபாகரன், ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றினால் ஒழிய நமது எதிர்காலம் பிரகாசமாக இருக்காது எனக் கூறி, 20 கேள்விகளுக்கு அரசு ஜூலை 14 }ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டார்.
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியிலே சேர்க்க வேண்டும் என்பதை கட்டாயமாக்காதது ஏன் ? 2012 }க்கு பிறகு எத்தனை பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன? அதில் எத்தனை மாணவர்கள் படிக்கின்றனர்? தமிழ் வழி வகுப்பு நடத்தும் ஆசிரியர்களே ஆங்கில வழி வகுப்புகளை நடத்துகிறார்களா ? ஆங்கில வழி வகுப்பை நடத்த பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்களா ? அரசு பள்ளியை விடுத்து பெற்றோர்கள் தனியார் பள்ளிகள் நாடுவதற்கு காரணம் என்ன ? குறித்த நேரத்திற்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா ? அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் சங்கங்கள் தொடங்குவதை ஏன் தடை செய்யக் கூடாது ? பள்ளி நேரங்களில் ஆசிரியர்கள் செல்லிடப்பேசி பயன்படுத்துவதை ஏன் தடை செய்ய கூடாது? என்பன உள்ளிட்ட கேள்விகளை நீதிபதி என்.கிருபாகரன் எழுப்பினார்.
No comments:
Post a Comment