பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, 11 ஆண்டு களாக, காலாண்டு, அரையாண்டு தேர்வு பாடத்திட்டம் வெளியிடவில்லை. இந்த ஆண்டாவது வெளியிடப்படுமா என, ஆசிரியர்கள் எதிர்பார்த்துள்ளனர். இதுகுறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது: பள்ளி திறக்கும் போதே, பொது தேர்வு தேதியை அறிவித்தது, தொலைநோக்கு பார்வையை காட்டுகிறது.
அதேநேரம், மாணவர்களின் படிப்படியான வளர்ச்சி மற்றும் உடனடி தேவைகளையும், அதிகாரிகள் மறந்து விடக்கூடாது. தற்போதைய நிலையில், அரசு பள்ளி மாணவர்களை, அதிக மதிப்பெண் பெற வைக்க, பாடத்திட்ட வழிகாட்டி குறிப்புகள் தேவை. மூன்று பருவ தேர்வுகள், காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில், ஒவ்வொரு பாடப்பிரிவு வாரியாக, எத்தனை அலகுகளை முடித்திருக்க வேண்டும் என்ற குறிப்புகள், பல ஆண்டுகளாக வழங்கவில்லை. தற்போதைய பாடத்திட்டத்தில், 2006ல் முதன்முதலாக, பாடத்திட்டம் குறித்த வழிகாட்டுதல் வழங்கப்பட்டது. காலப்போக்கில் இந்த முறையும் கைவிடப்பட்டதால், மாவட்டந்தோறும், பாடம் நடத்தும் அளவு மாறுகிறது. பழைய பாடத்திட்ட வழிகாட்டுதல் படி, தேர்வுகளில் வினாத்தாள்கள் இடம்பெறுவதில்லை.
பல பள்ளிகளில், தேர்வு முடிந்த பின் தான், தேர்வில் இடம்பெற்ற பாடமே நடத்தும் சூழல் உள்ளது.எனவே, ஒவ்வொரு தேர்வுக்குமான, 'போர்ஷன்' என்ன; அதை எந்த மாதம், வாரத்தில் முடித்திருக்க வேண்டும்; எப்போது, 'ரிவிஷன்' செய்ய வேண்டும் என, தெளிவான வழிகாட்டுதல் தேவை. மாநிலம் முழுமைக்கும் ஒரே மாதிரி வினாத்தாள்களை, காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் கொண்டு வர வேண்டும். இவ்வாறு ஆசிரியர்கள் கூறினர்.
No comments:
Post a Comment