தமிழகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் செயல்பட்டுவரும், 54,499 அங்கன்வாடி மையங்களில் 43 லட்சம் குழந்தைகள் பராமரிக்கப்படுகின்றனர். நிகழாண்டு முதல் தமிழகத்தில் அங்கன்வாடியில் இருந்து 5 வயது பூர்த்தியாகி, பள்ளிகளில் முதல் வகுப்புக்கு சேர்க்கைக்குச் செல்லும் குழந்தைகளுக்கு, சமூக நலம், பள்ளிக் கல்வித்துறை இணைந்து, மாற்றுச் சான்றிதழ் வழங்கும் திட்டம் இன்னும் சில தினங்களில் நடைமுறைப்படுத்தப்படும்.
நிகழாண்டில் இத் திட்டம் மூலம் தமிழகத்தில் 2.50 லட்சம் குழந்தைகள் பயன்பெறுவர். நாமக்கல் மாவட்டத்தில் 7,000 குழந்தைகளுக்கு மாற்றுச் சான்றிதழ் அளிக்கப்படும். பிறந்தது முதல் காது-வாய் குறைபாடுள்ள குழந்தைகளை விரைவில் அடையாளம் காண 15 மாவட்டங்களில் ஏழு முன்கூட்டியே கண்டறியும் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றின்மூலம் இதுவரை சுமார் 5,000 குழந்தைகள் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர். காது, வாய் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு அதிநவீன காக்ளியர் ட்ரான்ஸ்பிளான்ட் கருவி பொருத்த இந்த மையங்கள் பெரிதும் பயன்படுகின்றன என்றார்.
No comments:
Post a Comment