இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, October 09, 2013

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி உயர்வினை வழங்க முதல்வர் ஜெயலலிதா ஒப்புதல் தெரிவித்துள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜூலை 1-ஆம் தேதி முதல், முன்தேதியிட்டு இந்த அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படுகிறது. இந்த அகவிலைப்படி உயர்வால் ஒவ்வொரு அரசு ஊழியருக்கும் ஆசிரியருக்கும் கூடுதலாக அதிகபட்சம் ரூ.5 ஆயிரம் வரை கிடைக்கும் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் நேரங்களில் எல்லாம் தமிழக அரசு ஊழியர்களுக்கும் அதே அளவில் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படுவது வழக்கம்.

அதன்படி, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. இந்த நிலையில், அதே அளவில் தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படவுள்ளது. இதற்கான ஒப்புதலை முதல்வர் ஜெயலலிதா அளித்துள்ளதாக தலைமைச் செயலக அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்த அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. எவ்வளவு கிடைக்கும்?

: 10 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்படும் போது, மாதம்தோறும் குறைந்தபட்சம் ரூ.1000 முதல் அதிகபட்சம் ரூ.5 ஆயிரம் வரை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. தமிழகத்தில் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளனர். மேலும், இந்த அகவிலைப்படி உயர்வு, ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கும் கிடைக்கும்.

No comments:

Post a Comment