தமிழகம் முழுவதும் 750 உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சி வழங்கப்பட உள்ளது. கற்றல், கற்பித்தல் செயல்பாடுகள், ஆசிரியர்களின் திறமையை வெளிக்கொண்டு வருதல், மாணவர்களின் பெற்றோர்களுடன் உறவை மேம்படுத்துதல், பள்ளிகளில் உள்ள நூலகங்கள் மற்றும் விளையாட்டுத் திடல்கள் போன்றவற்றை சிறப்பாகப் பயன்படுத்துதல் உள்ளிட்டவற்றில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இங்கிலாந்து, இந்தியா கல்வி ஆராய்ச்சி திட்டத்தின் ஒரு பகுதியாக பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது. இந்தியாவில் தமிழ்நாடு, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது. தமிழகத்தில், முதல் கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமையாசிரியர்கள், ஓய்வுபெற்ற மாவட்ட கல்வி அதிகாரிகள் என 64 பேருக்கு சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் 5 நாள் பயிற்சி திங்கள்கிழமை தொடங்கியது. தமிழகம் முழுவதும் 750 பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு நவம்பர் இறுதியிலோ அல்லது டிசம்பர் தொடக்கத்திலேயோ தலைமைப் பண்பு பயிற்சி வழங்கப்படும் என கல்வித்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment