சமையல் காஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்யும் டீலர்களுக்கு, அளிக்கப்படும் கமிஷனை உயர்த்தி வழங்க வேண்டும் என, கோரிக்கை வைக்கப்பட்டது. இது தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில், சிலிண்டருக்கு, 3.50 ரூபாய் உயர்த்த, பெட்ரோல் திட்டம் மற்றும் மதிப்பீடு குழு, மத்திய பெட்ரோலிய அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்தது.
பொதுவாக, டீலர்களுக்கான கமிஷன் உயர்த்தப்படும் போது, அது வாடிக்கையாளர்கள் தலையில் தான் கட்டப்படும். கடந்தாண்டு அக்டோபர் மாதம், டீலர்களுக்கான கமிஷன், 11.50 ரூபாய் உயர்த்தப்பட்டது. அப்போது, டில்லியில், 399 ரூபாயாக இருந்த சிலிண்டர் விலை, 410.50 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இதை தொடர்ந்து மற்ற நகரங்களிலும் விலை உயர்வுக்கு அமலுக்கு வந்தது. தற்போது, சிலிண்டருக்கு, 3.50 ரூபாய் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதால், இதற்கான அறிவிப்பு இரண்டொரு நாட்களில் வரவிருக்கிறது.
தற்போது, ரசீதில் குறிப்பிடப்பட்டுள்ள விலையில் இருந்து, 3.50 ரூபாய் அதிகமாக கொடுக்க வேண்டியிருக்கும்.
No comments:
Post a Comment