தற்போதைய கேள்வி அமைப்பு முறையில், மாணவர்கள், அதிகளவில் மதி"ப்பெண் எடுக்கின்றனர். ஆனால், உயர்கல்விக்கு சென்றதும், "அரியர்ஸ்' வைக்க துவங்கி விடுகின்றனர். இதற்கு, சூபள்ளி பொதுத்தேர்வு கேள்வித்தாள் அமைப்பு சரியில்லை' என, பலரும் குற்றம் சாட்டுகின்றனர். பதிலை, அப்படியே, மனப்பாடம் செய்து எழுதுவது போன்ற முறையில் கேள்விகள் இருப்பதாக, ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
பள்ளி அளவிலேயே, சிந்தித்து, விடையை எழுதும் வகையில், கேள்விகள் அமைந்தால், மாணவர்களின் திறமை வெளிப்படும் என்றும், இந்த முறையினால், உயர் கல்வியையும் சிறப்பாக எதிர்கொள்ள முடியும் என்றும், கல்வித்துறை கருதுகிறது. சி.பி.எஸ்.இ., முன்னாள் தலைவர், பாலசுப்பிரமணியன் தலைமையில், தமிழக அரசு அமைத்துள்ள நிபுணர் குழு, கேள்வித்தாள் அமைப்பை மாற்றி அமைக்கும் பணியில், மும்முரமாக ஈடுபட்டுள்ளத
ு. சி.பி.எஸ்.இ., பாணியில், மாணவர்களின் அறிவுக்கூர்மையை வெளிப்படுத்தும் வகையிலான கேள்விகளை அமைக்க, நிபுணர் குழு திட்டமிட்டுள்ளது. மேலும், விடைத்தாள் கட்டுகளை கையாள்வதில் ஏற்படும் பிரச்னைகளை களைந்து, பாதுகாப்பான முறையில், தேர்வு மையங்களில் இருந்து, விடைத்தாள்களை எடுத்துச்செல்வதற்கான வழிமுறைகள் குறித்தும், இந்த குழு, பரிந்துரைகளை அளிக்க உள்ளது. இது குறித்து, கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், சூஇம்மாத இறுதிக்குள், அறிக்கை தயாராகிவிடும் என, எதிர்பார்க்கிறோம்.
முதல்வர் அனுமதி அளித்ததும், கேள்வித்தாள் அமைப்பு முறை, வெளியிடப்படும். புதிய திட்டத்தின்படி தயாரிக்கப்படும் கேள்வித்தாள், 2015 16ம் கல்வி ஆண்டில் அமலுக்கு வரும்' என்றார்.
No comments:
Post a Comment