தமிழ்நாட்டில் காலியாக உள்ள துணை கலெக்டர் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் 25 இடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களைநிரப்ப அரசு முடிவு செய்து, 25 பேர்களை தேர்வு செய்வதற்கான பணியை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்திடம் ஒப்படைத்து உள்ளது. இதையட்டி 25 பேர்களை தேர்வு செய்ய குரூப்-1 முதல் நிலை தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 16-ந்தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 75 ஆயிரத்து 627 பேர் எழுதினார்கள். அவர்களில் 1372 பேர்களை அரசுப்பணியாளர் தேர்வாணையம் தேர்ந்து எடுத்தது. தேர்ச்சி பெற்ற 1372 பேர்களுக்கு மெயின் தேர்வு நடத்த அழைப்பு அனுப்பப்பட்டது.
இன்று அந்த தேர்வு நடைபெற்றது. தமிழ்நாட்டில் சென்னையில் மட்டும்தான் இந்த தேர்வு நடத்தப்பட்டது. திருவல்லிக்கேணி என்.கே.டி. மேல்நிலைப்பள்ளி, எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்பட 14 மையங்களில் இந்த தேர்வு நடத்தப்பட்டது. 3 நாட்கள் நடக்கும் இந்த தேர்வு பொதுஅறிவை சோதிக்கும் தேர்வு ஆகும். கேள்விகள் அனைத்தும் கட்டுரை எழுதும்படி இருக்கும். தேர்வு நாளையும் நாளை மறுநாள் தேர்வு நடக்கிறது. தேர்வு நடப்பதை பார்வையிட அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் நவநீத கிருஷ்ணன் திருவல்லிக்கேணி என்.கே.டி. மேல்நிலைப்பள்ளி உள்பட சில மையங்களை பார்வையிட்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: 16 சதவீதத்தினர் வரவில்லை அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுகளை எந்த தவறும் இன்றி நேர்மையான முறையில் நடத்தி வருகிறோம். அதுபோலத்தான் குரூப்-1 தேர்வை நடத்துகிறோம்.
இநத தேர்வை 1372 பேர்கள் எழுத தகுதி உடையவர்கள். ஆனால் அவர்களில் 84 சதவீதம் பேர் தேர்வு எழுத வந்துள்ளனர். 16 சதவீதத்தினர் வரவில்லை. தேர்வு அறைகளில் பட்டதாரிகள் தேர்வு எழுதும்போது வீடியோ காட்சி எடுக்கப்பட்டுள்ளது. போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. 3 மாதத்தில் முடிவு வெளியீடு பட்டதாரிகள் எழுதிய விடைத்தாள்கள், சம்பந்தபட்ட பாடங்களில் நிபுணத்துவம் கொண்ட பல்கலைக்கழக, கல்லூரி பேராசிரியர்கள் கொண்டு மதிப்பீடு செய்வார்கள். தேர்வு முடிவை எவ்வளவு விரைவாக வெளியிட முடியுமோ அவ்வளவு விரைவாக வெளியிடுவோம்.அதாவது 3 மாதத்திற்குள் வெளியிட ஏற்பாடு செய்துள்ளோம். குரூப்-2 தேர்வு டிசம்பர் மாதம் 1-ந்தேதி நடக்கிறது.
அப்போது தான் ஐ.ஏ.எஸ். தேர்வு நடக்கிறது. இரு தேர்வுகளும் ஒரே நேரத்தில் நடத்தப்படுவதால் குரூப்-2 தேர்வை வேறு ஒரு தேதியில் தள்ளிவைக்கவேண்டும் என்று கேட்கிறார்கள். அதாவது குறைந்தது 15 பேர்களாவது இரு தேர்வையும் எழுதுகிறோம் என்று கூறி இரு தேர்வுகளுக்கு உரிய ஹால் டிக்கெட்டுகளையும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்¬வாணையத்தின் இணையதளத்திற்கு அனுப்பிவைத்தால் தேர்வு தள்ளிவைப்பது குறித்து ஆலோசிக்கப்படும்.
No comments:
Post a Comment