அரசு பொதுத் தேர்வுகளில்,தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைவாக இருக்கிறது.குறிப்பாக,சிவகங்கை, ராமநாதபுரம்,திருவண்ணாமலை,கடலூர், விருத்தாச்சலம்,பெரம்பலூர்,தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில்,அரசு பள்ளிகளில் 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளன. இதை தவிர்த்து,தேர்ச்சி விகிதத்தில் பின் தங்கிய மாவட்டம் மட்டுமின்றி,அனைத்து மாவட்ட மாணவர்களும் அரசு பொதுத்தேர்வில், அதிக மதிப்பெண் பெற வேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
குழு அமைப்பு: தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க, சி.இ.ஓ., அனைவருக்கும் கல்வி திட்ட கூடுதல் சி.இ.ஓ., மாவட்ட கல்வி அலுவலர், தலைமை ஆசிரியர்கள் அடங்கிய குழுவினை,ஒன்றியம் வாரியாக அமைக்க, அரசு உத்தரவிட்டுள்ளது. இக்குழு, தேர்ச்சி விகிதத்தில் பின்தங்கிய பள்ளிகளை ஆய்வு செய்து, அதற்கான காரணங்களை அறிந்து, அரசுக்கு தகவல் தர வேண்டும்.தன்மை கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது;
அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க, பள்ளிகளில் ஆசிரியர் காலிபணியிட விபரம் சேகரித்துள்ளோம். மாணவர்களின் மனநிலை அறிந்து,சிறப்பு வகுப்பு நடத்தப்படும், என்றார்.
No comments:
Post a Comment