அரசு ஊழியர்களுக்கு, பண்டிகை முன் பணம், 5,000 ரூபாய் வழங்க, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், கோரிக்கை விடுத்துள்ளது. சங்க மாநிலத் தலைவர் தமிழ்ச்செல்வி, பொதுச்செயலர் பாலசுப்பிரமணியன், ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை: தமிழக அரசு ஊழியர்களுக்கு, பண்டிகை முன் பணமாக, 5,000 ரூபாய் வழங்கப்படும் என, தமிழக முதல்வர் கடந்த ஆண்டு அறிவித்தார்.
அதன் அடிப்படையில், பல பண்டிகைகளுக்கு, ஏற்கனவே, 5,000 ரூபாய், முன் பணம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது, போதுமான பணம் ஒதுக்கீடு இல்லை என, காரணம் கூறி, கருவூலகங்களில் பல துறை அரசு ஊழியர்களுக்கு, தீபாவளி பண்டிகைக்கு, முன்பணம் வழங்க மறுத்து வருகின்றனர். இது தொடர்பாக, அரசுத் துறைகளின், தலைமை அலுவலர்களை, தொடர்பு கொண்டால், போதுமான நிதி ஒதுக்கீடு இல்லை என தெரிவிக்கின்றனர். இதனால், அரசு ஊழியர்கள் மிகுந்த அதிருப்தியும், வேதனையும் அடைந்துள்ளனர். முன் பணத்திற்கு, போதுமான நிதி வழங்க வேண்டியது, அரசின் கடமை என்பதை வலியுறுத்துகிறோம்
. எனவே, தீபாவளிக்கு சில நாட்களே உள்ள நிலையில், தமிழக முதல்வர் தலையிட்டு, விண்ணப்பித்த அனைவருக்கும், முன் பணம் வழங்கிட, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment