இன்றைய சூழ்நிலையில் கல்வித்துறையில் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்திருப்பது இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய மாற்றம். இது சம்பந்தமாக பல்வேறு ஆசிரியர் இயக்கங்கள் தனித்தும், இணைந்தும் பல கட்ட போராட்டங்களை நடத்திவிட்டன. ஆனால் தமிழக அரசின் மௌனம் கலைவதாக இல்லை. கூட்டு போராட்டம் மட்டுமே இதற்கு தீர்வு என பலமுறை நாம் வலியுறுத்தியுள்ளோம
். கடந்த ஆகஸ்ட்-18 அன்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அனைத்து இயக்கங்களுக்கும் அழைப்பு விடுத்து டிட்டோ-ஜேக் கூட்டத்தை கூட்டியது. அதில் முக்கிய இரண்டு கூட்டணிகள் பங்கேற்கவில்லை. அதன்பின் பொதுச்செயலாளர்கள் கூட்டத்தை கூட்டுவது என முடிவெடுக்கப்பட்டது. இதில் இதுவரை எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இது சம்பந்தமாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை கடந்த வாரம் கூட்டி ஆலோசித்தது. இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய விகித மாற்றத்திற்கு எந்தவித போராட்ட வியூகத்திற்கும் தயாராகவே உள்ளோம் என மாவட்டச்செயலாளர்கள் ஒருமித்த குரலாக கூறினர்.
அடுத்த கட்ட போராட்டத்தை எப்படி எடுத்துச் செல்வது என்பது பற்றி விவாதிக்க தமிழ்நாடு ஆரம்பப்பள்ளியின் உயர்மட்ட கூட்டம் (மாநில மையம்) நேற்று(13.10.2013) மாலை மதுரை மாவட்ட அலுவலகத்தில் கூடியது. இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. எனவே கூடிய விரைவில் கூட்டுப்போராட்டம் அறிவிப்பு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு ஏதுவாக பல்வேறு இயக்கத் தலைவர்களை நேரடி சந்திப்பு மூலம் இப்போராட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்க இருப்பதாக தெரிகிறது. இதற்கான முறையான முடிவுகளை தன்னோட மாநில செயற்குழுவில் விவாதித்து முடிவெடுக்கும் என நம்பப்படுகிறது. கூட்டுப் போராட்டம் என்றால் வட்டார அளவில் இருந்துதான் தொடங்க முடியும்
. ஏற்கனவே மாவட்ட மறியலில் TNPTF தன்னோட கடுமையான எதிரப்பை பதிவு செய்துள்ளது. ஒரே கல்வித்தகுதி உள்ள அனைவரிலும் இருந்து இடைநிலை ஆசிரியர்கள் வஞ்சிக்கப்பட்டதை தமிழ்நாடு ஆரம்ப்பப்ள்ளி ஆசிரியர் கூட்டணி தன்னோட கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. நேற்று கரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய டி.என.பி.டி.எப். பொதுச்செயலாளர் தோழர் பாலச்சந்தர் கூட்டுப்போராட்டத்திற்கு முயற்சி நடப்பதாக தெரிவித்தார். இதன் மூலம் இடைநிலை ஆசிரியர்க்கு சரியான தீர்வு கிடைக்கும் என்றார். ஒரு வேளை கூட்டுப்போராட்டத்திற்கு வராத இயக்கங்களை தவிர்த்து விரைவில் போராட்ட அறிவிப்பை வெளியிட வேண்டும் என்பதே தமிழக ஆசிரியர்களின் எதிர்பார்ப்பு. ஒன்றுபட்ட போராட்டமே நம் துயர் ஓட்டும். தோழர்களே தாங்கள் சார்ந்துள்ள இயக்க தலைமைகளை கூட்டுப்போராட்டத்திற்கு நிர்பந்தியுங்கள். இயலவில்லையென்றால் கூட்டுப்போராட்டம் நடத்தும் இயக்கத்தில் இணையுங்கள். நளைய வெற்றி நமதே!!! இளைஞர்கள் பலம் என்ன என்பதை இவ்வுலகிற்கு உணர்த்துவோம்.
No comments:
Post a Comment