தமிழகம் முழுவதும், 750 பள்ளிகள், அங்கீகாரம் இல்லாமல் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளில், 4 லட்சம் மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இவர்களில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவ, மாணவியர், அதிக அளவில் உள்ளனர். தமிழக அரசு நிர்ணயித்துள்ள அளவை விட குறைவாக இடம் உள்ள, பள்ளிகள் மற்றும் இரு இடங்களில் இயங்கும் ஒரே பள்ளிகள் ஆகியவை, பிரச்னையில் சிக்கி உள்ளன.
அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவியர், பொதுத் தேர்வை எழுத முடியுமா என, சந்தேகம் நிலவி வருகிறது. இந்த விவகாரத்தில், பள்ளிகள் மீது, தேர்வுத் துறை, கடுமையான கெடுபிடி நடவடிக்கை எடுப்பதாக கூறப்படுகிறது. இதனால், மாணவர், பெற்றோர் மத்தியில், பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், இந்த பிரச்னை குறித்து, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர், பிச்சை, நேற்று கூறுகையில்
, ''அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் படிக்கும் மாணவர், பொதுத் தேர்வை எழுதுவதில், எவ்வித பிரச்னையும் இருக்காது. தேர்வை எழுதுவதற்கு, அவர்களுக்கு, எவ்வித தடையும் இல்லை. தடை விதிப்பது போன்ற எந்த உத்தரவும், தேர்வுத் துறையிடம் இருந்து, எங்களுக்கு வரவில்லை. எனவே, மற்ற பள்ளி மாணவ, மாணவியரைப் போல், அங்கீகாரம் இல்லாத பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களும், பொதுத் தேர்வை எழுதலாம்,'' என்றார்.
No comments:
Post a Comment