இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, May 04, 2013

தலைமை ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை ரத்து

  தமிழகத்தில், அனைத்து வகை பள்ளிகளுக்கும், ஏப்ரல் 21ம் தேதி முதல், ஜூன் 2ம் தேதி வரை, கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளில் கோடை விடுமுறைக்கு பள்ளிகளில் உள்ள ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கும் விடுமுறையில் இருப்பர். தேவைப்படும் நேரத்தில் மட்டும் தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்கு வரும் நிலை இருந்தது. ஆனால், நடப்பாண்டில், அனைத்து வேலைநாட்களிலும், தலைமை ஆசிரியர்கள் அல்லது பொறுப்பு தலைமை ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கல்வித்துறை அலுவலர்கள் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசின் நலத்திட்டங்கள் குறித்தான அறிக்கை சமர்பித்தல் மற்றும் அனைத்து ஆய்வு அலுவலகத்திலிருந்து கிடைக்கப்பெறும் கடிதங்களுக்கு உடன் தகவல்கள் அளித்தல், 10 மற்றும் ப்ளஸ் 2 பொதுத்தேர்வுக்கான தேர்வு முடிவு வெளியிடப்பட்ட மாணவர்களின் விவரங்களை இணையதளம் மூலம் வேலைவாய்ப்பு பதிவு மேற்கொள்ளல், பள்ளி மாணவர் சேர்க்கை, மாற்றுச்சான்றிதழ் வழங்குதல், தேர்ச்சி விவரம் அளித்தல், பள்ளிகளில் நடந்து வரும் கட்டுமான பணிகளை மேற்பார்வையிடல், பள்ளி வளர்ச்சிக்கு தேவை குறித்து பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடத்துதல் போன்ற அலுவலர்களை தடையின்றி, மேற்கொள்ள வேண்டும். இதற்காக தலைமை ஆசிரியர் அல்லது பொறுப்பு தலைமை ஆசிரியர் மற்றும் தேவையான அலுவலக பணியாளர்கள் முழு நேரமும் பள்ளியில் இருந்து மேற்கண்ட செயல்களை செய்ய வேண்டும். இவர்கள் விடுப்பு எடுக்கும் பட்சத்தில் முதன்மைக்கல்வி அலுவலரின் முன் அனுமதி பெற வேண்டும். அலுவலர்கள் ஆய்வுக்கு வரும் போது, பள்ளி மூடப்பட்டிருப்பின், சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment