இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, May 15, 2013

"ஆன்லைன்' பதிவில் மாற்றம் வருமா :ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

  இடமாறுதல் "கவுன்சிலிங்'கில் பங்கேற்கும் ஆசிரியர்களின் விண்ணப்பங்களை, மே 18 க்குள் ஆன்லைனில் பதிவு செய்ய, கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.அனைத்து மாவட்டங்களிலும், மே 22, 23 ல் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கும், 24, 25ல் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் இடமாறுதல் "கவுன்சிலிங்' நடக்கிறது. விருப்பம் உள்ள ஆசிரியர்கள், "கவுன்சிலிங்' கில் பங்கேற்க, ஏற்கனவே அந்தந்த தலைமை ஆசிரியர்களிடம், விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து, வழங்கிய நிலையில், அனைத்து விண்ணப்பங்களையும் 4 நாட்களுக்குள் (மே 14 முதல் 18க்குள்) "ஆன்லைனில்' பதிவு செய்ய வேண்டும், என்று தற்போது வலியுறுத்தப்பட்டு உள்ளது.

அனைத்து முதன்மை கல்வி அலுவலகங்களிலும், ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்யும் முறை, நேற்று துவங்கிய நிலையில், அதிகபட்சமாக 3 "கம்ப்யூட்டர்'களில் மட்டுமே பதிவு பணிகள் நடக்கின்றன. ஒரு விண்ணப்பம் பதிவு செய்ய, குறைந்தது 15 நிமிடம் வரை ஆகிறது. நூற்றுக்கணக்கான விண்ணப்பங்களை, குறிப்பிட்ட நாட்களுக்குள் பதிவு செய்ய முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது:அனைத்து பள்ளிகளிலும் "ஆன்லைன்' வசதியுடன் "கம்ப்யூட்டர்' வசதி உள்ளது. மாணவர்களுக்கான "ஸ்மார்ட் கார்டு' பதிவு செய்தது, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் தெரிந்துகொண்டது, அந்தந்த பள்ளிகளில் உள்ள கம்ப்யூட்டர்களில் தான். எனவே, "கவுன்சிலிங்' விண்ணப்பங்களையும், அந்தந்த பள்ளிகளில் ஆன்லைனில் பதிவு செய்தால், ஆசிரியர்களும், பல கிலோ மீட்டர் தூரம் உள்ள முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு தேவையின்றி அலைய வேண்டியதில்லை. பள்ளிகளிலேயே பதிவு செய்ய, கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால், விரைவில் பணிகள் முடியும், என்றனர்.

No comments:

Post a Comment