இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, May 31, 2013

அரசுபள்ளிகளில் புதிதாக சேரும் மாணவர்களுக்கு அனைத்து இலவச பொருட்களும் வழங்க ஏற்பாடு

   அரசுமற்றும் அரசுநிதியுதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல், பிளஸ் 2 வரை, புதிதாக சேரும் மாணவ, மாணவியருக்கு மட்டும், தமிழக அரசின், இலவச புத்தக பை வழங்கப்படும். ஏற்கனவே பை வாங்கியவர்களுக்கு, மீண்டும் வழங்கப்படாது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும், ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு, புத்தகம் உட்பட, 16 வகையான இலவச பொருட்களை, தமிழக அரசு வழங்குகிறது. 2012 -13 ம் கல்வியாண்டில் காலணி, அறிவியல் உபகரண பெட்டி தவிர மற்ற பொருட்கள் வழங்கப்பட்டன. வரும் கல்வியாண்டு துவக்கத்தில், அனைத்து இலவச பொருட்களையும் வழங்க, பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்காக, ஜூனில் பள்ளிகள் திறந்தவுடன் மாணவர்களின் எண்ணிக்கை விவர பட்டியலை வழங்க வேண்டும் என, கல்வித்துறை அலுவலகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கல்வித்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், " மாணவர்களுக்கு முன்கூட்டியே இலவச பொருட்களை வழங்கினால், பயனுள்ளதாக இருக்கும் என்பதால், அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தனியார் பள்ளிகளில் இருந்து, அரசுபள்ளிகளில் சேரும் மாணவ, மாணவியருக்கு, அனைத்து இலவச பொருட்களும் வழங்கப்படும்' என்றார். இது குறித்து, தொடக்க கல்வித்துறை வட்டாரங்கள் கூறுகையில்,

"தனியார் பள்ளிகளில் இருந்து, அரசுமற்றும் அரசுநிதியுதவி பெறும் பள்ளிகளில் சேரும் அனைத்து மாணவ, மாணவியருக்கும், அரசின் இலவச பொருட்கள் வழங்கப்படும். குறிப்பிட்ட வகுப்பு என்றில்லாமல், ஒன்று முதல், பிளஸ் 2 வரை, எந்த வகுப்புகளில் புதிதாக சேர்ந்தாலும், அந்த மாணவர்களுக்கு, இலவச பொருட்கள் வழங்கப்படும்' என, தெரிவித்தன.-

No comments:

Post a Comment