பள்ளி மாணவர்களுக்கு ஜூன் மாதம் முதல் வாரத்தில் பாடப்புத்தகங்கள் கிடைக்க தமிழ்நாடு பாடநூல் கழகம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த ஆண்டு 9–ம் வகுப்பு மாணவர்களுக்கும் முப்பருவமுறையில் புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. இலவச பாடப்புத்தகம் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ்–2 படிக்கும் அனைவருக்கும் பாடப்புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
ஆனால், தனியார் சுயநிதி பள்ளிகளில் படிக்கின்ற மாணவ–மாணவிகள் கட்டணம் செலுத்தித்தான் புத்தகங்களை வாங்க முடியும். பள்ளி மாணவர்களுக்கான பாடப்புத்தகங்களை அரசு நிறுவனமான தமிழ்நாடு பாடநூல் கழகம் அச்சிட்டு வழங்குகிறது. மேலும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் அச்சகங்கள் மூலமாகவும் புத்தகங்கள் அச்சிடப்படுகின்றன. தமிழ்நாடு பாடநூல் கழகம் அச்சிட்டு வெளியிடும் பாடப்புத்தகங்களை வாங்கவே மாணவ–மாணவிகளும், பெற்றோரும் விரும்புகிறார்கள்.
5½ லட்சம் புத்தகங்கள் அச்சடிப்பு கோடை விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் ஜூன் 3–ந்தேதி திறக்கப்பட உள்ளன.
No comments:
Post a Comment