"அரசுப் பள்ளிகளில், 3,711 ஆசிரியர்களும், 1,146 ஆசிரியர் அல்லாத பணியிடங்களும், நடப்பு கல்வி ஆண்டில் நிரப்பப்படும்" என பள்ளிக் கல்வி அமைச்சர் வைகைச்செல்வன் அறிவித்தார். சட்டசபையில், அவர் வெளியிட்ட அறிவிப்பு: கடந்த, 2011-12, 12-13 ஆகிய ஆண்டுகளில், 63 ஆயிரத்து, 125 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, நடப்பு கல்வி ஆண்டில், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள், 313; துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள், 380; முதுகலை ஆசிரியர் பணியிடங்கள், 880; பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், 1,094; இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள், 887; சிறப்பாசிரியர் பணியிடங்கள், 156 என, 3,711 பணியிடங்கள் நிரப்பப்படும்.
மேலும், உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள், 16 பேர், அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர்கள், இரண்டு பேர், விரிவுரையாளர்கள், 99 பேர், உடற்கல்வி இயக்குனர்கள், எட்டு பேர் என, 125 பேரும் நியமனம் செய்யப்படுவர். ஆசிரியர் அல்லாத பணியிடங்கள்:உதவியாளர்கள் (நேரடி நியமனம்), 850 பேர்; சுருக்கெழுத்து தட்டச்சர்கள், 18 பேர்; இளநிலை உதவியாளர்கள், 188 பேர் மற்றும் தட்டச்சர்கள், 90 பேர் என, 1,146 பேரும், நடப்பு கல்வி ஆண்டில் நியமனம் செய்யப்படுவர்.இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்.
No comments:
Post a Comment