கட்டண பாடப்புத்தகத்தின் (ஒரு செட்) விலை ரூ.5 முதல் அதிகபட்சம் ரூ.65 வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. முதல் வகுப்புக்கான புத்தக விலையில் எவ்வித மாற்றம் இல்லை. அதிகபட்ச அளவாக 8–ம் வகுப்பு புத்தகத்தின் விலை ரூ.65 அதிகரிக்கப்பட்டு உள்ளது. புத்தக விலை உயர்வு விவரம் வகுப்பு வாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. (பழைய விலை அடைப்புக்குறிக்குள்)
2–ம் வகுப்பு – ரூ.65 (ரூ.60)
3–ம் வகுப்பு – ரூ.90 (ரூ.80)
4–ம் வகுப்பு – ரூ.90 (ரூ.80)
5–ம் வகுப்பு – ரூ.100 (ரூ.80)
6–ம் வகுப்பு – ரூ.105 (ரூ.80)
7–ம் வகுப்பு – ரூ.140 (ரூ.100) 8–ம் வகுப்பு – ரூ.165 (ரூ.100)
தனியார் அச்சகங்களுக்கு வேண்டுகோள் இதற்கிடையே, ஒன்றாம் வகுப்பு முதல் 9–ம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்களை (தமிழ் நீங்கலாக) அச்சிட விரும்பும் தனியார் அச்சகங்களிடம் இருந்து மாநில பொது பள்ளிக்கல்வி வாரியம் விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. தனியார் அச்சகங்கள் வருகிற 24–ந் தேதிக்குள் 2 பிரதி வரைவு புத்தகங்களை சமர்ப்பிக்குமாறும் பள்ளிக்கல்வி வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
No comments:
Post a Comment